செந்தமிழுக்குள்ளே இத்தனை மொழிகளா?

ஆங்கில மொழியில் “ஸ்கர்ட்” என்கிறாங்க
தூய தமிழில் “அரைப்பாவாடை” என்போமே!
இந்தி (ஹிந்தி) மொழியில் “ஜோடி/சோடி” என்கிறாங்க
தூய தமிழில் “இணை” என்போமே!
பாரசீக மொழியில் “லுங்கி” என்கிறாங்க
தூய தமிழில் “மூட்டு வேட்டி” என்போமே!
உருது மொழியில் “தமாஸ்” என்கிறாங்க
தூய தமிழில் “வேடிக்கை” என்போமே!
அரபு மொழியில் “ஜாமீன்”; என்கிறாங்க
தூய தமிழில் “பிணை” என்போமே!
தெலுங்கு மொழியில் “ஜட்டி” என்கிறாங்க
தூய தமிழில் “கவ்வுரி” (ஆண் உள் இடுப்பு ஆடை) என்போமே!
மராத்தி மொழியில் “பால்கோவா” என்கிறாங்க
தூய தமிழில் “திரட்டுப்பால்” என்போமே!
உலகம் சுற்றி வந்தால் தெரியுமே
ஆளுக்காள்
தமிழென்று பேசுவது பிற மொழியே!
அத்தனை தமிழரும்
இத்தனை பிற மொழிகளைக் கொஞ்சம்
நீக்கிப்போட்டுப் எழுதிப் பேசினால்
தூய தமிழென்று உலகம் புரியுமே!
உலகெங்கும்
தூயதமிழ் பரவட்டும் என்றால்
பிற மொழிகளை நீக்கிப் போட்டு
பேசும்மொழி ஒன்றே செந்தமிழென
நம் தமிழர் வாழ்வில்
வழக்கப்படுத்துவதே வழி!

Advertisements