என்றும் இனிய தமிழ் இனி

தமிழா! தமிழா!
தமிழர் பேசுவது தமிழா!
பழக்கம் வழக்கம் மாற்றுவது தமிழா!
தமிழன் வாயாலே கக்குவது எல்லாமே
இந்திய மாநில மொழிகளின்
கலவையா தமிழா?
ஒல்லாந்தர், போத்துக்கேய, ஆங்கிலேய
மொழிகளின் திணிப்பா தமிழா?
தலையை நிமிர்த்தித்
தமிழனென்று மிடுக்கோடு நடைபோட
பேசுந்தமிழில் இருந்து
பிறமொழிகளை நீக்கிவிடு தமிழா!
ஆங்கில அ(ஹ)லோ, ஃபலோ
தமிழானால் பாரும்
வணக்கம், பின்பற்று என்று
சொல்லலாம் தமிழா!
இந்தி மொழி ஜோடியும்
உருது மொழி தமாஸும்
தமிழானால் பாரும்
இணையென்றும் வேடிக்கையென்றும்
எடுத்துச் சொல்லலாம் தமிழா!
பிரெஞ்சில குசினி
டொச்சில கக்கூஸ்
வடமொழியில பிரச்சனை
கன்னடத்தில சமாளி
என்றெல்லாம்
தமிழிலே கலந்து சொல்ல
வேண்டாமப்பா – அவற்றை
அடுப்படி, கழிப்பறை, கலகம், தீர்வுகாணென
செந்தமிழில்
எடுத்தாளப் பழகிவிடு தமிழா!
பிறமொழிச் சொல்களை மறக்காமல்
அடைப்புக்குள் எழுதிவிடு
தூயதமிழில் தெளிவுபெறும் வரையாவது
நம்மாளுகள் புரிந்திடவே!
தமிழைத் தமிழாகவே
பேச்சிலெடு தமிழா…
கல் தோன்றி
மண் தோன்றாக் காலத்து
மூத்த தமிழ்
இனிய தமிழ் இனி என்றும்
மங்காதெனப் பேணுவோம் வா!

Advertisements

8 thoughts on “என்றும் இனிய தமிழ் இனி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.