உறவுகளே! எதை ஊட்டி வளர்க்கிறீர்கள்?

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால்
நாட்டுக்கு வருவாய் கிடைக்கிறதாய்
அரசு முழங்கினாலும் – பாரும்
அவர்கள் விட்டுச் சென்ற எச்சங்களாய்
இன, மதப் பண்பாடுகள் சீரழிவை…
சுமக்க முடியாத சேலை
கட்டவேண்டியோர்
இடுப்பு, மார்புக் கச்சுகளை மறைக்க
கிழிந்த துணியைப் போர்க்கும் நிலை…
கரும் சுருட்டு, வெண் சுருட்டு,
கரும் தண்ணி(அற்ககோல்), வெண் தண்ணி(கள்ளு)
போதாக்குறைக்கு வைப்பாட்டி எல்லாமே
சுற்றுலாப் பயணிகளால் பரவியதே…
சுற்றுலாப் பயணிகளின் வைப்பாட்டிச் செயல் தான்
நம் நாட்டு
விலைமகள் வணிகத்திற்கு வேராச்சே…
வெளிநாட்டுப் பண்பாடுகள்
நம் நாட்டுக் காற்றில் வீச
நம்ம திரைப்படங்களும் விளம்பரமே…
தாயா, மகளா
அழகிலே பெரியவள் என்ற போட்டியில்
மகள்மார் சீரழியத் தானே முடியும்…
இன்னும் பல இருந்தாலும்
எழுத
என் எழுதுகோல் மறுக்கிறதே!
அறிஞர்களே… பெரியோர்களே…
பாலூட்டிப் பிள்ளை வளர்க்கையிலே
தாய் மொழியோடு பண்பாட்டையும்
ஊட்டி வளர்க்கத் தவறிவிட்டால்
வருங்காலத்தில்
மனிதர்களும் விலங்குகளைப் போல
ஆடையின்றி உலாவ நேரிடுமே!
தூய தமிழைப் பேணு என்றால்
தமிழில் கலந்து இருக்கும்
பிறமொழிகளை நீக்குவது போலத்தான்
தமிழ் பண்பாட்டில் கலந்து இருக்கும்
பிற பண்பாடுகளை நீக்க வேண்டுமே!
தமிழின் சிறப்பு என்பது
பொருள் இலக்கணம் மட்டுமல்ல
சிறந்த பண்பாட்டை விரித்துரைப்பதுமே!
தமிழ்ப் பண்பாடு வாழுமிடம் எங்குமே
தமிழ் வாழ்கிறது என்று – அந்த
கந்தக் கடவுளுமே பொருள் கொள்வார்!

Advertisements

4 thoughts on “உறவுகளே! எதை ஊட்டி வளர்க்கிறீர்கள்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.