நம்ம தமிழரைப் பாருங்க…

அறிஞர் ஒருவரின் கருத்துகளை
படித்ததில் இருந்து பொறுக்கியதை
தங்களுடன் பகிர்ந்தால் நல்லந்தானே!
“எந்த நிலையிலும் பிரஞ்சுக் காரர்கள்
ஆங்கிலம் கலந்து
எழுதவோ பேசவோ மாட்டார்கள்!” என்றால்
நம்ம தமிழரைப் பாருங்க…
தமிழுக்குள்ளே
எல்லா மொழியும் கலந்து
எழுதுவதும் பேசுவதும் ஆகிட்டார்களே!
ஆங்கில மொழியிலும் – தனித்த
ஆங்கில இலக்கியப் போக்கு இருந்தாலும்
நம்ம தமிழரைப் பாருங்க…
புதியது (நவீனம்) என்று கூறி
சங்கம் அமைத்துத் தமிழ் பேணிய
இலக்கியப் போக்கை மறந்து போயினரே!
“பழமை எனயெண்ணி
அப்படியே ஆளுதல் சிறப்பன்று!
எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ் என்ற நிலையை
உருவாக்க வேண்டும்!” என்று கூறும்
அறிஞர் கி.பாரதிதாசன் அவர்களே…
(சான்று:http://bharathidasanfrance.blogspot.com/2014/07/30.html)
“தமிழ் அல்லாத சொற்களை நீக்குதலும்
புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குதலும்
தமிழ் காப்போர் கடமை!” என்கிறாரே!
எங்கள் தமிழ் உறவுகளே
ஏற்றதொரு முடிவு எடுங்கள்…
அறிஞர் கி.பாரதிதாசன் கூற்று
உலகெங்கும் தூயதமிழ் பேண
வழிகாட்டும் வாக்கு என்பேன்!

Advertisements

6 thoughts on “நம்ம தமிழரைப் பாருங்க…

 1. வணக்கம்!

  அருமை! அருமை! அகம்மகிழ்ந்து நின்றேன்!
  பெருமைச் செயற்புரிந்தீர்! பேணும் – உரிமையுடன்
  வண்ணத் தமிழ்வளர்க்கும் உன்றன் வலைகளை
  எண்ணப் பெருகும் எழில்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.