தமிழை நீந்திக் கடந்தவர் எவருமுளரோ!

தமிழென்பது பெருங்கடல். அதனை நீந்திக் கடந்தவர் எவருமுளரோ என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படியாயின், தமிழை நீந்திக் கடப்பதென்பது இலகுவான பணியல்ல. பெருங்கடலான தமிழைக் கற்கப் பல நூல்கள் தேவை. அதற்கு உதவுவது நூலகங்களே!

தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் “நூலகங்களை அறிவோம்!” என்ற பதிவைத் தனது வலைப்பூவில் பதிவுசெய்துள்ளார். தொன்மை வாய்ந்த பழம் பெரும் நூலகங்களை அறிமுகம் செய்து “நூலகம் இல்லாத ஊரில் தான் குடியிருக்கக்கூடாது.” என்கிறார். மேலும் புத்தக சாலை, நூல்களைக் கடந்து சிந்திப்போம், சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும் ஆகிய தொடர்புடைய இடுகைகளைச் சொடுக்கிப் படிக்கவும்.

நூல்கள் என்பது அறிஞர்களின் அறிவைத் தரும் வைப்பகம். உங்கள் வீட்டு வைப்பகத்தில் எத்தனை நூல்களைத் திரட்டி வைக்க முடியும்? எல்லாம் திரட்டி வைக்க முடியாதென்பீர்! அதற்குத் தானே நூலகங்கள் இருக்கின்றன. நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் படிக்கலாமே! அதற்கு முன் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கித் தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் நான்கு பதிவுகளையும் படியுங்கள்.

http://www.gunathamizh.com/2014/07/blog-post_23.html

Advertisements

6 thoughts on “தமிழை நீந்திக் கடந்தவர் எவருமுளரோ!

  1. முனைவர் இரா குணசீலன் அவர்களின் பதிவினைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வருகிறேன் நண்பரே
    தமிழுணர்வு மிக்கவர் பாராட்டிற்கு உரியவர்
    நன்றி நண்பரே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.