களவும் கற்று மற

எனக்குத் தமிழில்
நீந்திச் சுழியோடத் தெரியாது…
என்றாலும்
பலர் தமிழில் நீந்தியிருக்கலாம்…
தமிழில் நீந்திய ஒருவர்
அண்ணே! அண்ணே!
“களவும் கற்று மற” என்றால்
என்னவன்று சொல் என்றார்!
களவைக் கற்கச் சொல்கிறார்
கற்ற களவை மறக்கச் சொல்கிறார்
எனக்கு ஒன்றுமே புரியவில்லை…
கற்றதைக் காற்றிலே பறக்க விடலாமோ?
யார் தான் அதை மறப்பார்…
ஆனால்
“காவற்றுறை உள்ளே தள்ளும்” என்று
எவர் தான் களவைக் கற்பார்?
இதற்கு மேலே
என்னாலே சொல்ல ஏதுமில்லை என்றேன்!
என்னண்ணே!
இப்படிச் சொல்லிப் போட்டியள்…
“காளை மோளைப் பார்த்ததும்
மோளை காளையைப் பார்த்ததும்
ஒருவருக்கொருவர்
உள்ளத்திலே தோன்றும் விருப்பம் – அந்த
விருப்பத்தைத் தமக்குள்ளே பேணுவதும்
களவு தான் அண்ணே!
ஆனால்
அந்தக் களவைத் தான்
பெத்தவங்க கோட்டைத் தாண்டாமல்
திருமணம் முடித்ததும் மறக்கணும்”
என்பதைத் தான் அண்ணே
“களவும் கற்று மற” என்று
அகநாநூற்றிலே
பாடப்பட்டுள்ளதாக சொன்னாரே
தமிழில் நீந்திய ஒருவர்!
பத்துப் பாடல், நூற்றுப் பாடல் என
எத்தனையோ இருக்கலாம்…
இன்னும் எவ்வளவோ
தமிழில் படிக்க வேண்டியிருப்பதை
தமிழில் நீந்தியவர்
கேட்ட கேள்வியின் பின்னரே
நானும் உணர்ந்தேன்!

 

Advertisements

8 thoughts on “களவும் கற்று மற

   • களவும் கத்தும் மற என்பது களவும் கத்து மற என்றானதாகவும் ஒரு பார்வை உண்டு.
    கத்து என்றால் பொய் என்று சொல்லுவர் அவர்.
    ஆனால நீங்கள் சொல்லும் பொருளே எனக்கும் உடன்பாடு!
    பகிர்வுக்கு நன்றி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.