உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்…

நண்பர் ஒருவர் கேட்டார்
“தூய தமிழ் சொல்லித் தரமாட்டியளோ?” என்று…
“நமது வழக்கிலுள்ள தமிழில் இருந்து
பிற மொழிகளைக் களைந்து விட்டால்
நமது புழக்கத்தில்
தூய தமிழ் இருக்குமே!” என்று
நானும் பதிலுரைத்தேன்!
வானில் இருந்து இறங்கிய
மழையோடு வந்து வீழ்ந்தவன்
நான் அல்லன்
பெற்றவர்கள் ஈன்ற பின்னர்
தெருவெளி அங்காடியில் விற்ற
நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய
அறிவைப் பிறருக்கு வழங்குவதே
என் பணி!
“பிறமொழிச் சொல் அகராதி” என்ற
நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து;
ஆங்கிலத்தில் “ஸ்கர்ட்” என்பது
தமிழில் அரைப் பாவாடையே…
ஹி(இ)ந்தியில் “ஜோ(சோ)டி” என்பது
தமிழில் ‘இணை’ என்பதையே
பாரசீக மொழியில் “லுங்கி” என்பது
தமிழில் மூட்டுவேட்டியே
உருது மொழியில் “தமாஸ்” என்பது
தமிழில் வேடிக்கையே
அரபி மொழியில் “ஜாமீன்” என்பது
தமிழில் ‘பிணை’ என்பதையே
மராத்தி மொழியில் “பால்கோவா” என்பது
தமிழில் திரட்டுப்பாலையே
தெலுங்கு மொழியில் “ஜட்டி” என்பது
தமிழில் கவ்வுரி(ஆண் உள்ளிடுப்பு ஆடை)யே
அட கடவுளே…
நம்மாளுகள் பேசும் தமிழிலே
எத்தனை பிறமொழிகளப்பா?
உலகெங்கிலும் வாழும் தமிழர்களே
நடப்புத் தமிழில் இருந்து
பிறமொழிகளைத் தூக்கியெறிந்தால்
உலகெங்கிலும் தூய தமிழ் பரவுமே!

நூல் : பிறமொழிச் சொல் அகராதி
ஆசிரியர் : எஸ்.சுந்தர சீனிவாசன்
பதிப்பாசிரியர் : விகரு.இராமநாதன்
முதற்பதிப்பு : அக்டோபர், 2005
வெளியீடு : சிறி இந்து பப்ளிகேஷன்ஸ்
வெளியீட்டாளர் முகவரி :-
இல:40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,
(உஸ்மான் ரோடு), த.பெ.எண் : 1040,
தியாகராய நகர் – சென்னை 600 017.

Advertisements

9 thoughts on “உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்…

 1. நல்லவிசயங்களை தொகுத்து வழங்குகிறீகள் நன்றி ஐயா தங்களை ஒரு விசயத்தில் இழுத்து விட்டு இருக்கிறேன் எனது பதிவை பார்க்கவும்.

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

   பார்த்தேன்!
   பத்துக் கேள்விக்குள் என்னையும் உள்ளே தள்ளிப்போட்டியள்!
   விரைவில் பதில் தருகிறேன்.

  • எனது பதிவை இணைத்து அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
   தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
   மிக்க நன்றி.

 2. முதல் வரி மே ற்கோளாக இருக்கிறது. போகட்டும்.

  ஆனால், உங்கள் மறுமொழயில் ” பத்துக் கேள்விக்குள் என்னையும் உள்ளே தள்ளிப்போட்டியள்! ” என்று எழுதினால் தூய தமிழ் எவ்வாறு வளரும்? தூய தமிழ் வலியுறுத்து வோ ரே தடு மாறினால் பிறருக்கு எவ்வாறு வழி காட்ட முடியும்?
  தமி ழை வலியுறுத்தும் சுந்தர சீனிவாசன் முதல‌ெழுத்தைத் தமிழில் குறிப்பிட்டிருக்க வே ண்டும். பதிப்பகத்தார் தமிழில் பெ யர் சூட்டி யிருக்க வேண்டும்.

  • உரிமையுடன் தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
   என்னை நான் திருத்திக்கொள்கிறேன். அடிக்கடி தளத்திற்கு வருகை தாருங்கள். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.