ஓர் ஆறுதல் பரிசாவது எனக்குக் கிடைத்ததே!

எனது “தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
http://wp.me/pTOfc-96” என்ற பதிவிற்கு தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடாத்திய மாபெரும் கட்டுரைப்போட்டியில் ஓர் ஆறுதல் பரிசாவது எனக்குக் கிடைத்ததைத் தங்களுடன் பகிருகின்றேன்.

ஓர் ஆறுதல் பரிசாவது எனக்குக் கிடைத்ததே!

நானோ அறிவில் சிறியன். அங்கு, இங்கு, எங்கோ பொறுக்கியதைத் தொகுத்து ஆக்கியதை நட்பைப் பேணும் நோக்குடன் அனுப்பியிருந்தேன். சின்னப்பொடியனான எனது பதிவிற்கும் ஆறுதல் பரிசை வழங்க நடுவர்கள் எண்ணியதால் கிடைத்த சான்றிதழை மேலே பார்க்கலாம். ஓர் ஆறுதல் பரிசாவது எனக்குக் கிடைக்கப் பங்கெடுத்த எல்லோருக்கும் மிக்க நன்றி.

என் இனிய உறவுகளே! ரூபன், பாண்டியன் போன்று போட்டிகள் நடாத்தி, பரிசில் வழங்கித் தமிழ் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் அறிஞர்களை மதிப்பளிக்கும் நோக்கில் எனது யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://yppubs.blogspot.com/) ஊடாகச் ‘சிறந்த செயலாற்றுநர்’ சான்றிதழ் (Award) வழங்கலாம் என எண்ணியுள்ளேன். இம்முயற்சிகள் மேலும் தொடரவும் உலகெங்கும் வலைப்பூக்கள் ஊடாகத் தமிழ் பரவவும் உதவும் என நம்பி ‘சிறந்த செயலாற்றுநர்’ சான்றிதழ் (Award) வழங்க விரும்புகிறேன். இதற்கான அறிவிப்பை விரைவில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://yppubs.blogspot.com/) தளத்தில் தருவேன்.

 

Advertisements

4 thoughts on “ஓர் ஆறுதல் பரிசாவது எனக்குக் கிடைத்ததே!

 1. வணக்கம்

  போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் நல்ல சேவை தொடருங்கள். எப்போது ஆதரவு தர காத்திருக்கேன்…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. இனிய வாழ்த்து தங்கள் முயற்சி வெற்றிக்கு.
  தங்கள் ஊக்குவிப்பு முயற்சிக்கும் வாழ்த்துகள் நிறைய..நிறைய..
  வேதா. இலங்காதிலகம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.