தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம்

காலை வேளை பணிக்குச் செல்வதற்கு பேரூந்து நிலையத்திற்குச் சென்றேன். “மோர்னிங் பிறேக் பாஸ்ட் எடுக்காததால றிங்ஸ் குடிக்கணும் போல இருக்கு. அந்தக் கொட்டலில போய் றிங்க் பண்ணிட்டு வாறேன்.” என்று பிரண்டு ஒருவர் பஸ் ஸ்ரொப்பில என்னை விட்டிட்டு எஸ்கேப் ஆயிட்டான். இது பேரூந்து நிலையத்தில் நின்ற நண்பர் ஒருவரின் கூற்று.

நண்பரின் கூற்றில் பத்து ஆங்கிலமும் பதின்மூன்று தமிழும் கலந்து இருக்கிறது. இன்று இருபத்திமூன்றில பத்து ஆங்கிலமாயின் நாளைக்குப் பதினைந்து ஆங்கிலமாகலாம். இப்படிப் போனால் தமிழ் இனி மெல்லச் சாகும். இருப்பினும் எல்லாச் சொல்களும் பிறமொழிச் சொல்களாயின் தமிழ் சாவடைந்ததாகக் கருதலாம்.

தமிழ் போலத் தமிழில் உலாவும் வடமொழி மற்றும் பிறமொழிகளும் இருக்கிறது. அதனைக் கூட நாம் அடையாளப்படுத்தித் தமிழில் இருந்து அகற்றிவிட முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு முன் தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம் என்றாவதை நிறுத்தப் போராடுவோம். இதற்குத் தமிங்கிலம் எழுதுவோர், பேசுவோரை தாய்த் தமிழுக்கு உள்வாங்க வேண்டும். சிங்கப்பூரில் சிங்கை மொழி + இங்கிலிஷ் = சிங்கிலிஷ் ஆன கதையாகத் தான் தமிங்கிலம் தோன்றலாம்.

தமிழைப் பேசுவோர் எல்லோரும் தமிழர். தமிழ் சாவடைந்ததால் தமிழரை எந்த மொழிக்காரர் என்றழைப்பது? சிந்தித்துப் பிறமொழிச் சொல்களை நீக்கித் தூய தமிழ் பேச முன்வாருங்கள். அதற்கு முன் தமிழோடு ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் உருவாவதை நிறுத்த முன்வாருங்கள்.

உலகில் 7000 மொழிகள் இருந்த இடத்திலே, இன்று 2000 மொழிகள் தானாம் உள்ளன. எஞ்சிய மொழிகள் அழிந்தமைக்கு பிறமொழிக் கலப்பும் ஒரு காரணமாம். பிறமொழிச் சொல்களை நீக்கி, அதற்கு ஈடான தமிழ் சொல்களைப் பாவித்தால் தூய தமிழ் பேணலாம். மேலும், தமிழின் தனித்துவத்தை மேம்படுத்தலாம் என்பது என் கருத்து.

Advertisements

8 thoughts on “தமிழ் + ஆங்கிலம் = தமிங்கிலம்

 1. வணக்கம்
  அண்ணா.

  தங்களின் ஆதங்கம் புரிகிறதுவீட்டில் கூட தாய் தந்தையர் பிள்ளைகளிடம் தங்களின் தாய் மொழியை போதிக்க வேண்டும் இப்போதைய காலத்தில் தாங்ந்தையர் ஆங்கிலத்தில் பேசுவதால் எமது மொழி அழிந்து போக வாய்ப்புஅதிகம்.என்றுதான் சொல்லவேண்டும. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.