26 எழுத்தா 247 எழுத்தா சுகமானது?

உறவுகளே! 26 எழுத்துள்ள ஆங்கிலமா, 247 எழுத்துள்ள தமிழா படிப்பது இலகு?

எழுத்துக் குறைந்த ஆங்கிலம் படிப்பது கடினம். ஒரே உச்சரிப்பில் பல சொற்கள் அமைவதால், உச்சரிப்புச் சிக்கல் இருக்கும்.
எழுத்துக்கள் கூட உச்சரிப்புச் சிக்கல் குறையும். எனவே, தமிழைப் படிப்பது சுகமே!
ஆங்கிலத்தில் இலக்கணம் குறைவு. தமிழில் இலக்கணம் அதிகம்.

“எல்லாம் சரி, படிப்பு மட்டும் எனக்குக் கிட்ட வரமாட்டேங்குதே…” என்று சிலர் கூறலாம். தாய்மொழியைப் படிக்காமலே தானே வந்துவிடுமே! அதெப்படி? பெற்றோர், உற்றார், குடும்பம், சூழல் வழியாக தமிழ் ஊட்டிவிடப்படுமே!

தமிழென்றால் படிப்பு மட்டும் வரமாட்டேங்குதே என்போர்; ஆங்கிலம் படிக்க எப்படி முடிகிறது? மேலும் “பிழை பிழையாக ஆங்கிலம் கதைத்தால் மதிக்கிறாங்கள். அதையும் எடுப்பாக Broken English என்கிறாங்களே!” என்று அவர்கள் கதை விடுகிறார்களே!

“சரியாகத் தமிழைக் கதைத்தால் கூட மதிக்க மாட்டேங்கிறாங்க…” என்போர் “நம்மாளுகளுக்கு எப்ப தமிழ்ப் பற்று வரும்?” என்கிறாங்க. தமிழ் பேசுவோரையும் தமிழில் பேசுவோரையும் தமிழில் எழுதுவோரையும் தமிழர் போற்றிப் புகழாமை என்பது தமிழுக்கு இழிவு தரும் செயலே!

தாய் மொழியைப் பேணிக்கொண்டு, நாம் எத்தனை மொழிகளிலும் கதைக்கலாம்… பேசலாம்… அதைத் தடுக்க எவராலும் முடியாது. தாய் மொழியை மறந்து பிறமொழியில் மூழ்கியோரே! உங்களுக்கு எப்பவும் 247 எழுத்துள்ள தமிழை விட 26 எழுத்துள்ள ஆங்கிலம் சுகம் தானே!

Advertisements

4 thoughts on “26 எழுத்தா 247 எழுத்தா சுகமானது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.