தமிழ்/தமிழர் அடையாளம்

கட்டு உரை (கட்டுரை), நாடகம்
எழுத முனைந்தால்
தமிழில் எழுத முனையுங்கள்
கதை புனைந்தால்
பா/கவிதை புனைந்தால்
தமிழில் புனையுங்கள்
ஆங்கிலம் கலக்காதீர்…
இன்னும்
முயற்சி எடுப்பின்
பிற மொழிச் சொற்களையும் நீக்கு
சற்று சிந்தித்தால்
தூய தமிழ்!
பிற மொழிகளை உடுத்தி
தூய தமிழைக் கழட்டிக் காட்டுவதா
தமிழரின் மொழி அடையாளம்!
எழுத்தில் கிறுக்கினாலென்ன
பேச்சில் வெளிப்படுத்தினாலென்ன
செயலில் காட்டினாலென்ன
நற்றமிழும் தமிழ்ப்பண்பாடும்
மின்னினால் தானே
தமிழரின் ஆள் அடையாளம்!

Advertisements

2 thoughts on “தமிழ்/தமிழர் அடையாளம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.