தாய் மொழி பேசாத் தமிழர் அடிமைகளா?

இரண்டு தமிழ் தெரிந்த வெள்ளைக்காரரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது தாய்மொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். இரண்டு ஆங்கிலம் தெரிந்த தமிழரைப் பாருங்கள். அவர்கள் சந்தித்தால் அவர்களது பிறமொழியான ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். அவ்வாறான தமிழரைக் கேட்டால் “இது நமது எடுப்பு (Style)” என்பர். இதன்படிக்குத் தமிழர் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்கள் எனக் கருத இடமுண்டு.

இப்படிப் பல்வேறு சாட்டுகளைச் சொல்லி தாயகத்துத் தமிழரும் புலம்பெயர் நாட்டுத் தமிழரும் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்களாகி பிறமொழிக் கலப்பு அல்லது பிறமொழி பேசுவோராக மாறிவிட்டனர். இந்நிலையே “மெல்லத் தமிழ் இனி சாகும்” என்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது. ஆயினும் “மெல்லத் தமிழ் இனி சாக இடமில்லை” எனத் தமிழை வாழவைக்க முயற்சி எடுக்கும் தமிழ் உறவுகளைப் பாராட்டுவோம். தமிழைச் சாக வைப்போர் கீழுள்ள கதையைப் படிக்கவும்.

இது பச்சைக் கிளிக்கும் கறுப்புக் காகத்திற்கும் இடையோன கதை. இதனை அந்திமாலை தளத்தில் “அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை” என்ற தலைப்பில் எழுதியிருந்தார்கள். அதாவது, கறுப்புக் காகம், பச்சைக் கிளி ஆகிய இரண்டு பேசும் பகுதி (கதா பாத்திரம்) ஊடாகத் தமிழைப் பேசாதோர் அடிமைகள் என்றும் அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை என்றும் கதையாசிரியர் வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்.

நான் அந்தக் கதையை “தாய் மொழி பேசாத் தமிழர் அடிமைகளா?” என்ற தலைப்பில் எனது வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன். பச்சைக் கிளிக்குத் தமிழைப் பழக்கிச் சோதிடக்காரர் பாவிக்கையில் “கீ… கீ…” என்ற தாய்மொழியை மறந்து சோதிடக்காரர் கட்டளைக்கு பணிவது போல நம்மாளுகளும் அடிமையாக மாறுகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. காகத்தை “கா… கா…” என்று அழைத்து உணவு ஊட்டும் நம்மாளுகளின் நிலையைச் சுட்டி கறுப்புக் காகம் “அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை” என பச்சைக் கிளிக்குச் சொல்வதாய் கதை முடிகிறது.

இனி, அந்திமாலை தளத்திற்குச் சென்று கதையைப் படியுங்கள். பின்னர் எல்லோருக்கும் இந்தக் கதையைக் கூறித் தமிழரிடையே தாய்மொழிப் பற்றை ஊட்டி உலகெங்கும் தூய தமிழ் பேண முயற்சி எடுப்போம் வாரீர். அதற்குக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.

அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை

Advertisements

4 thoughts on “தாய் மொழி பேசாத் தமிழர் அடிமைகளா?

 1. என்னென்னவோ செய்தும் எம் மொழியை ஏற்றி வைத்தல் சிறப்பு.
  இனிய வாழ்த்து
  வேதா. இலங்காதிலகம்.

 2. எமது தளத்தில் வெளியாகிய ‘உவமைக் கதை’ ஒன்றை தனது தளத்தில் வெளியிட்டுக் கௌரவித்த அன்பர்.ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றிகள்.
  ‘ஒன்றுபட்டு உயர்வோம்’
  ஆசிரியர்
  அந்திமாலை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.