வலைப்பூக்களும் பதிவுகளும் தெரியாதா?

உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேண வலைப்பூக்கள் சிறந்த ஊடகமே! நான் 1995 இல கணினி படிக்கையிலே இப்படி எதிர்பார்க்க வில்லை. இன்றைய இளசுகள் இது பற்றி எண்ணிப் பார்க்காமல் இருப்பது துயர் தரும் செய்தியாகவே இருக்கிறது. ஆயினும், தமிழ் நாட்டில் இருந்து எண்பத்தாறு அகவையிலும் புலவர் ஐயா வலைப்பூ நாடாத்தித் தமிழ் பரப்பிப் பேண முன்நிற்கையில் இன்றைய இளசுகள் பின் நிற்பது சரியா?

எனவே, இன்றைய இளசுகள் வலைப்பூக்களையும் பதிவுகளையும் தெரிந்து கொண்டு உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேண முன்வரவேண்டும். அவர்களுக்கு வசதியாக அறிஞர்களின் அறிவுரைகளை இங்கு அறிமுகம் செய்கிறேன்.

“நீங்களும் வெப்சைட் செய்யலாம்” என்ற தலைப்பின் கீழ் “இன்னும் உங்கள் வலை மனையைக் கட்டலையா?” என்ற கேள்வியுடன் வலைப்பூக்கள் வடிவமைப்பது பற்றித் தேவையான தகவலைக் ‘கணணித்தமிழ்’ தளம் விளக்குகிறது. அதனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://www.kananithamil.blogspot.com/2010/12/blog-post_29.html

“பதிவுத் திருட்டைத் தடுக்கப் புதிய பூட்டு” என்ற தலைப்பின் கீழ் காப்புரிமை, தகவல் திருட்டு, பாதுகாப்பு என ‘எதிர்நீச்சல்’ தளம் பதிவர்களுக்கு வழிகாட்டுகிறது. அதனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://tech.neechalkaran.com/2011/09/protect-your-blog-post.html

வலைப் பதிவில் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய நுட்பங்களைக் கற்றிட “திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டல்” என்ற பதிவை ஏற்கனவே நான் அறிமுகம் செய்துள்ளேன். அதனைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://wp.me/pTOfc-9q

உறவுகளே! இப்படிப் பெரிய அறிஞர்கள் கூறும் தகவலைக் கற்றுத்தேறினால் உங்களாலும் வலைப்பூக்கள் நாடாத்தித் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே! தமிழில் ஒருங்குகுறி (Unicode) தட்டச்சு சிக்கலா? கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
http://www.thamizhagam.net/fonts/fonts.html
மேலும், பாமினி எழுத்துருவில் தட்டச்சுச் செய்து லதா ஒருங்குகுறிக்கு (Unicode) மாற்றிக்கொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml
ஈற்றில் எனது முயற்சித் தள இணைப்பையும் தருகிறேன்.
http://devkjeevan.webs.com/

உறவுகளே! இனி உங்களால் வலைப்பூக்கள் நாடாத்தித் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே! அதற்காகக் கிணற்றுத் தவழை போன்று இருந்துவிடாது, பிற அறிஞர்களின் வலைப்பூக்களையும் படித்து முன்னேறுங்கள்.

Advertisements

6 thoughts on “வலைப்பூக்களும் பதிவுகளும் தெரியாதா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.