காற்றோடு கலந்த தமிழ்

மோதிக் கொள்ளும் வீசும் காற்றே!
தமிழாய்க் கூவிச் சென்று மோது!
(மோதி)
கூவிச் செல்லும் வீசும் காற்றே!
தமிழைக் காவிச் சென்று பேசு!
(கூவி)
பிறந்த குழந்தை அழுவதும் தமிழாலே!
‘ஆ’வென அழுகையில் எழுவதும் தமிழுயிரே!
‘இம்’என அழுகையில் எழுவதும் தமிழ்மெய்யே!
அம்மாவென அழுகையில் எழுவதும் தமிழ்ச்சொல்லே!
எல்லாம் வாயாலே எழுவதும் காற்றாலே!
(மோதி)
(கூவி)
தேன்தமிழெனத் தழுவிடும் தென்றல் காற்றே
தெற்கால நம்மாளுகள் நலமா சொல்லு
வான்முட்ட மோதிடும் வாடைக் காற்றே
வடக்கால தமிழர் நலமா சொல்லு
நான்பாடக் காற்றே தமிழாலே சொல்லு!
(மோதி)
(கூவி)
தமிழாகக் கூவிடும் கொண்டல் காற்றே
கிழக்கால நம்மாளுகள் நலமா சொல்லு
தமிழெனப் பாடிவரும் மேலைக் காற்றே
மேற்கால வாழ்வதும் தமிழெனச் சொல்லு
காற்றோடு கலந்ததும் தமிழெனச் சொல்லு!
(மோதி)
(கூவி)
மென்காற்றும் மாறி இளந்தென்றல் ஆகலாம்
இளந்தென்றலும் மாறித் தென்றலாக வீசலாம்
தென்றலும் மாறிப் புழுதிக்காற்று ஆகலாம்
புழுதிக்காற்றும் மாறி ஆடிக்காற்றாய் வீசலாம்
ஆடிக்காற்றும் மாறிக் கடுங்காற்று ஆகலாம்
கடுங்காற்றும் மாறிப் புயற்காற்றாய் வீசலாம்
புயற்காற்றும் மாறிச் சூறாவளி ஆகலாம்
சூறாவளியும் கூடவே தமிழாக வீசலாம்
காற்றோடு கலந்தது தமிழென்று பாடுவோம்!
(மோதி)
(கூவி)


காற்றுப் பற்றிய தகவலுக்கு:

http://wp.me/pTOfc-9X

Advertisements

4 thoughts on “காற்றோடு கலந்த தமிழ்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.