தமிழை வாழ வைக்கும் வழி

நானும் தூய தமிழ் பேண மதியுரை கேட்டு அலைகின்ற வேளை முனைவர் இரா.குணசீலன் அவர்கள் தனது தளத்தில் “தமிழ் வாழ வேண்டுமா?” என்ற தலைப்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாவொன்றைப் பதிவு செய்திருப்பதைப் படித்தேன்.

” ”தமிழ் வாழ்க“ வென்பதிலும் தமிழ்வா ழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! ” என முதற் பாவும்
” பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது ” என அடுத்த பாவும்
” செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும் ” என அடுத்த பாவும்
” தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும்! ” என ஈற்றுப் பாவும் தொடங்குகிறது.

தூய தமிழ் பேணும் பணியில் ஈடுபடும் எல்லோரும் ஒவ்வொரு தமிழருக்கும் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் பதிவைப் படிக்கத் தூண்டுவீர்களாயின் பேருதவியாக இருக்கும். மேலும், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மதியுரை தூய தமிழ் பேண வழிகாட்டுகிறது என்பதை மறத்தலாகாது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மதியுரையைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

தமிழ் வாழ வேண்டுமா? (பாவலரேறு)

Advertisements