மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை!

2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் 7500 மொழிகள் இருந்தனவாம். 2000 ஆம் ஆண்டில் 3000 மொழிகள் ஆக குறைந்து காணப்பட்டது. இந்நிலைக்குக் காரணம் தாய் மொழிக்குள் பிறமொழிகள் நுழைந்தமையே. இதனால் தான், தமிழும் இனி மெல்லச் சாகுமெனப் பேசப்பட்டது. இதற்குச் சான்றாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட கருத்துக் கணிப்புப்படி தமிழும் அழியவிருக்கின்ற மொழிகளில் ஒன்றென பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆயினும், மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை. தமிழர் ஏதிலியாக உலகெங்கும் பரந்து வாழ்கையில் அவ்வவ் நாட்டு மொழிகளை பின்பற்ற இடமிருக்குமென அஞ்சி, ஆங்காங்கே தமிழைப் பேண முயற்சி செய்கிறார்கள். ஆங்காங்கே வாழும் தமிழறிஞர்கள் தமிழைப் பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலும், இணைய வழியில் தமிழ் அழியாது பேணும் நோக்கில் தமிழ் இணையப் பக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. Facebook, google, wikipedia போன்ற முக்கிய தளங்கள் மட்டுமல்லாது microsoft போன்ற மென்பொருள் உற்பத்தியாளர்கள் தமது தமிழ் பதிப்புகளை வெளியிட்டும் வருகிறார்கள். தமிழ்நண்பர்கள்.கொம் தளம் போன்று பல தமிழைப் பேணும் கருத்துக்களம்(forum) இணைய வழியில் முளைக்கிறது. நம்மாளுகள் ஆங்கிலத்தில் Personal Home Page தயாரித்த காலம் போய்; தமிழில் வலைப்பூ(blog) நடாத்துவதில் அக்கறை காட்டுகின்றனர்.

மேலும், தமிழறிஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தமிழைப் பேணும் வழிகளை ஆய்வு செய்கின்றனர். மொழிப்பற்றுள்ள ஊடகங்கள் கூட தமிழைப் பேணும் வழிகளை வெளிப்படுத்தி வருகின்றன. இந்திய-தமிழக அரசின் தமிழைச் செம்மொழியென அறிவித்தமை இம்முயற்சிகளுக்கு உந்து சக்தியாக உள்ளது.

எனவே, தங்களது தமிழைப் பேணும் வழிகளை இப்பக்கத்தில் பின்னூட்டமாகத் தெரிவித்தால் நன்மை தரும். உலகெங்கும் தமிழ் மொழி மூல வலைப்பூ நடாத்தும் எல்லோருக்கும் நன்றி.
ஆயினும், வலைப்பூ நடாத்தும் நாம் எல்லோரும் நாளைய வழித்தோன்றல்களுக்கு; தமிழ் இனிச் சாக இடமில்லாதவாறு தமிழைப் பரப்பிப் பேண ஒத்துழைப்போம்.

Advertisements

4 thoughts on “மெல்லத் தமிழ் இனிச் சாக இடமில்லை!

 1. சமூகத் தளங்களில் நாம் ஒவ்வாருவரும் நமது கருத்துக்களை நம் தமிழ் மொழியில் வெளியிடுவதும்,பதிவு செய்வதும் நம் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் சிறந்த வழிமுறையாகளாகும்.

  • தங்கள் மதியுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
   எல்லோரும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவோம்.

 2. அய்யா வணக்கம். கருத்து (பின்னூட்டம்) எனும் பெயரில் ஒரு பெரும் கட்டுரையை
  அனுப்பச் சொல்கிறீர்களே அய்யா? வலைப்பக்கங்களில் எழுதிவரும் கட்டுரைகளைப்
  பார்த்தால் அதன் உள்ளடக்கம் தெரியுமே? செல்பேசி, கணினித் தொழில்நுட்பங்களைத்
  தமிழில் கொண்டுவருவது தலையாய தேவையாக எனக்குப் படுகிறது. இல்லையேல், இன்றைய
  தலைமுறை தமிங்லீஷ் பழகி அதுவொரு தனி மொழியாகிவிடுமோ என்று அச்சம் தருகிறது.
  (எளிதாக வேறு இருக்கிறதல்லவா?) அதன்பின் ஊடகத்தினூடாகத் தமிழை ஒழிக்கும்
  முயற்சியை முறியடிக்க யோசிக்க வேண்டும். பயிற்றுமொழியாகவும் வயிற்று
  மொழியாகவும் வரச்செய்ய யோசிக்க வேண்டும். கோவிலில் வடமொழி, இசைமேடையில்
  தெலுங்கு, தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் கல்விக்கூடங்களில் ஆங்கிலம்
  என்பதையெலலாம் தமிழுக்கு மாற்றும் ஆக்கபூர்வ யோசனைகளே இப்போதைய தேவை இதை
  விரித்தால் பெரிய கட்டுரையே எழுதலாம்… சுருக்கத்தை எழுதவைத்த உங்களுக்கு
  நன்றி. எனது வலைப்பக்கத்தை உங்கள் திரட்டியில் சேர்க்கப் பலமுறை முயன்றும்
  இயலவில்லை. நீங்களாகச் சேர்த்தால் மகிழ்வேன். எனது வலைச்சுட்டி –
  http://valarumkavithai.blogspot.in/ வணக்கம்

  • தங்கள் மதியுரையை ஏற்றுக்கொள்கிறேன்.
   எல்லோரும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துவோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.