அறிஞர் பட்டாபி ராமன் கூறும் தமிழின் சிறப்பு

உறவுகளே! எனது எழுத்துகள் தளத்தில் ‘தமிழருக்குத்தானே பெருமை’ (http://eluththugal.blogspot.com/2014/03/blog-post_20.html) என்ற பதிவிற்கு அறிஞர் பட்டாபி ராமன் அளித்த கருத்தைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன்.
“Pattabi Raman6 April 2014 07:07
தமிழனே !
தமிழனாக பிறந்தும்
தமிழ் மொழியைப்பேச மறுக்கிறாய்
தமிழின் சிறப்பையாவது அறிந்துகொள்

என்றும் நிலைத்து வாழும்
தமிழ் மொழியின் சிறப்பை
அறிந்துகொள்ளுவோம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ! (பாரதி )

காற்றுக்கு பெயர்!!!
தெற்கிலிருந்து வீசினால் — தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் — வாடை
கிழக்கிலிருந்து வீசினால் — கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் — மேலை

உலகில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு!
இந்த உலகம் உள்ளவரை நம் தமிழ் வாழவேண்டும்!

(அ) திசை பொருத்து காற்றின் பெயர்கள்:
(௧) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
(௨) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
(௩) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
(௪) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

(ஆ) காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:
(௧) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “மென்காற்று”
(௨) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “இளந்தென்றல்”
(௩) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “தென்றல்”
(௪) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புழுதிக்காற்று”
(௫) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “ஆடிக்காற்று”
(௬) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று “கடுங்காற்று”
(௭) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று “புயற்காற்று”
(௮) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று “சூறாவளிக் காற்று”

இப்பேற்பட்ட மொழியை தமிழர்கள்
புறக்கணிப்பது வேதனையிலும், வேதனை !
நன்றி: பஞ்சநாதன் கைலாசம் pnathan123@gmail.com” என்ற
பதிவில்
காற்றைப் பற்றியும் காற்றோடு கலக்கும் தமிழின் சிறப்பையும் அழகாகக் கூறியுள்ளார்.

அறிஞர் தொட்டுக் காட்டிய கருத்துகள், நம்மவர் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். நம்மாளுகள் கற்றுக்கொள்ள வேண்டிய அறிவைக் கூறுகிறார். நாலா பக்கத்திற்கும் (நாற்றிசைக்கும்) நாலு காற்று மற்றும் எட்டு வேகநிலையிற்கும் எட்டுக் காற்று எனத் தமிழைத் தோண்டித் தொட்டுக் காட்டும் பதிவாக இருப்பதால், நான் இதனை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

Advertisements

2 thoughts on “அறிஞர் பட்டாபி ராமன் கூறும் தமிழின் சிறப்பு

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.