உங்களாலும் முடியும்; முயலுங்கள்!

வலைத்தள, வலைப்பூ உறவுகளே! கீழுள்ள விளம்பரத்தைப் படியுங்கள். இதனை google+, facebook, twitter, linkedin ஆகிய வலைகளில் பதிவு செய்திருந்தேன். facebook இல் சிவசண் எனும் லண்டன் நண்பர் மதியுரை வழங்கியும் இருந்தார்.


படைப்பாளிகளுக்கான, பதிவர்களுக்கான
இலவச வலைப்பூக்கள் (Blogs) வடிவமைப்பு வகுப்புகள்

உலகம் எங்கும் வலைப்பூக்கள் (Blogs) ஊடாக தமிழ் பரப்பிப் பேண விரும்புவோர் மற்றும் இலக்கிய விரும்பிகள் (ஆர்வலர்கள்) எல்லோரும் இவ்வகுப்பில் இணையலாம்.

தொடக்கம்: 19/04/2014 சனி மலை 3 மணி – 5 மணி
உள்ளடக்கம்:
Internet, Email, Webs, Html அறிமுகம்
Domains, Short Urls, Hostings அறிமுகம்
கருத்துக்களம் (Forums)
வலைப்பூக்கள் (WordPress, Blogger, Blogs)
திரட்டிகள் (தமிழ்நண்பர்கள், தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு)
பதிவை வெளியிடுதல், பதிவைப் பகிருதல் போன்ற எல்லா நுட்பங்களும் அறிமுகம் செய்யப்படும்.
ஆசிரியர்: காசி.ஜீவலிங்கம் (யாழ்பாவாணன்)
இடம்:
North Lead Educational Center
No: 328 A, Stanly Road,
Jaffna.
நடைபேசி: 0776564693
மின்னஞ்சல்: yarlpavanan@hotmail.com
கட்டணம்: இலவசம்
வேண்டுதல்: முன்கூட்டியே பதிவு செய்யும் முதல் இருபது ஆள்கள் மட்டுமே முதற் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.


மேலுள்ள விளம்பரத்தைப் படித்துவிட்டீர்களா? இது எனது யாழ் மண்ணில் நான் மேற்கொள்ளும் சிறு முயற்சி என்பேன். நான்கைந்து ஆள்கள் இலவச வகுப்பில இணைந்தாலும் அத்தனை ஆள்களும் ஆளுக்கொரு வலைப்பூ (Blog) நடாத்தித் தமிழ் பரப்பினால் போதுமே!

இவ்வாறு நீங்களும் முயற்சி செய்யலாம். உங்களாலும் முடியும்; முயலுங்கள்! உங்களூரில் உங்கள் முயற்சியாலும் பலர் வலைப்பூ (Blog) நடாத்தித் தமிழ் பரப்பினால் நல்ல பயனைத் தருமே! இந்நிலையை உலகெங்கும் விரிவுபடுத்தினால்; உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண முடியுமென நான் நம்புகிறேன்.

தற்போது வலைப்பூக்கள் (Blogs) நடாத்தும் எல்லோரும் ஒன்றிணைந்தும் கூட பல புதிய வலைப்பூ (Blog) நடாத்துவோரை உருவாக்கிவிட முடியுமென நம்புகிறேன். அதனால், உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண முடியுமென நான் நம்புகிறேன்.

வலைத்தள, வலைப்பூ உறவுகளே! உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண இது போன்ற பல பணித் திட்டங்களை நீங்களும் அறிமுகம் செய்யலாம். 2014 ஆம் ஆண்டிற்கான பதிவர் சந்திப்பு சென்னையில் இடம்பெறும் போதாவது உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேணும் பணித் திட்டங்களை அறிமுகம் செய்வார்கள் என நம்புகிறேன்.

Advertisements

8 thoughts on “உங்களாலும் முடியும்; முயலுங்கள்!

  1. முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். கண்டிப்பாக புதியவர்கள் வலைப் பூவினைத் தொடங்க நாம் ஊக்குவிக்கவேண்டும்.

  2. வணக்கம் ஐயா
    ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் தங்கள் கட்டுரை ஆறுதல் பரிசினைப் பெற்றுள்ளது. வாழ்த்துகள்.. தொடர்ந்து தங்களது சிந்தனை தமிழ்ச் சமூகத்திற்கு உதவட்டும். நன்றி..
    முடிவுக்கு: http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.