ஆங்கிலத்திடம் இருந்து தமிழை விடுவிக்கப் போராடுவோம்.

என்னங்க நம்மாளுங்க தமிழோடு ஆங்கிலத்தையும் கலக்கிப் பேசுறாங்க… ஆமாங்க பாலுக்க தண்ணீரைக் கலந்து விற்கிற நம்மாளுங்க தான் அப்படிப் பேசுறாங்க… பாலுக்க தண்ணீரைக் கலந்தால் தண்ணிப் பால் போல தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்தால் ஆங்கிலத் தமிழ் ஆக்கலாமென எண்ணுறாங்களோ! இதுபற்றி நம்ம உணற்சிக் கவிஞர் காசிஆனந்தன் “தமிழா! நீ பேசுவது தமிழா!” என்ற தலைப்பில் புனைந்த பாவைப் படித்துப் பாருங்களேன்.

அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை…
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை…
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை…

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?

நம்மளைப் பார்த்து உணற்சிக் கவிஞர் காசிஆனந்தன் இப்படிப் புரட்டிப் புரட்டிக் கேட்கிறாங்களே. அப்படி அவரு கேட்கிறதில, உண்மை இருக்கிறதில தான் நம்மால அவரோட மோத இயலாமல் அவரின் காலில விழுகிற நிலையில இருக்கிறோம். உண்ணானப் பாருங்கோ… எனக்கும் ஒரு கவிதை வருகுதே… அதையும் சும்மா படித்துப் பாருங்கோவேன்.

மணநாள் வீடொன்றுக்குப் போனேன் – அங்கேயும்
வெடிங்க முடிய ரெஜிஸ்ரேசன் – பிறகு
ரிசெப்சன் அன்று ஆட்டுப் பிறைற் றைஸ்
தனித் தனி இன்விற்றேசன் கிடையாது
ஓல் ஒவ் யூ கம் என்றாங்க – அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல…
பிறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் – அங்கேயும்
ஸ்ரைலா நில்லுங்கோவேன், ஸ்மைல் பிளீஸ்,
போட்டோ, வீடியோ, கேக், றிங்ஸ், கிவ்ற் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க – அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல…
இறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் – அங்கேயும்
டெட் பொடி, கண்ணாடி பொக்ஸ், என்பாம், போமலின் என
அவங்கவங்க பேசிக்கொண்டாங்க – அதில
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல…
தமிழ் திரைப்படமொன்று பார்த்தேன் – அதில்
தமிழ் தெரியாதவங்க நடித்தாங்க – அவங்க
பேசியதெல்லாம்
ஆங்கிலமாத் தான் இருந்திச்சு – அதால
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல…
நான் ஒண்ணும் படிக்காதவனுங்க – அதனாலே
எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல – ஆயினும்
நானும் நாலு படித்திருந்தால் – அப்ப
எனக்கெல்லாம் விளங்கி இருக்குமே!

எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல என்றால் ஒன்றுமே புரியவில்லை அல்லது அறிந்திட முடியவில்லை என்று பொருள் கொள்ளலாம். நான் தான் படிக்காதவன், என் தலையில தான் களிமண் என்றால் “உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும் தான் தமிழ் இல்லை’ என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டது போல் என்று…  தினமணி தளத்தில் எழுதியிருக்காங்களே!

“தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் எல்லோரும் நிற்கிறோம்.” என “தமிழா, நீ பேசுவது தமிழா? (By First Published : 20 August 2010 12:18 AM IST)” என்ற தலைப்பின் கீழ் http://www.dinamani.com/ ஒரு கட்டுரையைத் தந்திருக்கிறது. அதனைப் படித்து ஆங்கிலத்திடம் இருந்து தமிழை விடுவிக்க உலகத் தமிழராகிய நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://www.dinamani.com/editorial_articles/article959836.ece

என்னங்க தினமணி தளத்தின் “தமிழா, நீ பேசுவது தமிழா?” படித்தாச்சா… அப்படி என்றால் உணற்சிக் கவிஞர் காசிஆனந்தன் ஐயா கேட்ட கேள்விகளுக்கு தினமணி தளத்தின் பதில்கள் சரியா… எப்படியோ ஆங்கிலத்திடம் இருந்து தமிழை விடுவிக்கப் போராடித்தானே ஆகவேண்டும். அதற்குத் “தமிழ் மொழி பேணும் சிங்கங்கள்” என்ற இயக்கத்தைத் தொடங்கி நீங்களே தலைவராகுங்கள். நானோ உங்களுக்குத் தொண்டராகின்றேன். எப்படியோ தமிழில் இருந்து பிற மொழிகளை ஓட ஓட விரட்டி விட்டு; நம்ம பழந்தமிழை, நற்றமிழை, தேன்தமிழை, தூயதமிழை உலகெங்கும் பரப்பிப் பேண உலகத் தமிழராகிய நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம்

Advertisements

8 thoughts on “ஆங்கிலத்திடம் இருந்து தமிழை விடுவிக்கப் போராடுவோம்.

 1. உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்த போது பேருந்துகளில் தமிழில் (காலனிஎன்பதை குடியிருப்பு என்று மாற்றி )பெயர்ப் பலகைகளை வைத்தார்கள்.அடுத்த மாநாடு வருவதற்குள் அவையெல்லாம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக் கொண்டன ,அரசே இப்படியென்றால் …எப்போது சுத்த தமிழ் நடைமுறையில் வரும் ?

  • நகைச்சுவையாக, அருமையாக, நறுக்காக, தெளிவாக நம்ம நிலையை எடுத்துச் சொன்னீர்கள். பாராட்டுகள்.
   மிக்க நன்றி.

  • நீங்கள் கூறியதைப் போன்று அரசுதான் முயற்சிக்கவேண்டும். ஆனால், அரசு பள்ளிகளிலேயே ஆங்கில வழிக்கல்வி வந்துவிட்டதே.

   • தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
    தமிழைப் பேண அறிஞர்கள் மாற்று வழிகளை முன்வைத்தால் பயனுடையதாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.