நமது உறவுகளைத் தெரியாத நம்மாளுகள்

உலகெங்கும் தமிழர் வாழ்ந்தாலும் தமிழ் வாழவில்லை காணும். தமிழர் பேச்சைக் கேட்டால், தமிழை வெளிப்படுத்தப் பல்லுக் கொளுவுதாக்கும்; பிறமொழிகளே மலிந்திருக்கும். அப்படியொரு நிலையில் தமிழர் உறவு எப்படி இருக்கும்.

“தமிழன் தாய்ப் பெயரோ மம்மி
அவன் நாய்ப் பெயரோ ஜிம்மி
தமிழ் பேசும் தாத்தா பாட்டியோ டம்மி
டாடி வீட்ல இருப்பதோ கம்மி
வெளிநாட்டு கதையெழுதறேன் விம்மி :-)” என்றவாறு
(https://plus.google.com/112641844811673276825/posts/15mwYNsaPpJ)
கூகிள் பிளஸில் நண்பர் Shankar G (Shared publicly – 5 May 2012) தமிழர் உறவு முறைகளைப் பதிவு செய்துள்ளார்.

இப்படித்தானையா… இப்படித்தானம்மா… நம்ம தமிழும் கெட்டுப் போய், நம்ம தமிழ் உறவும் பட்டுப் போய் கிடக்கிறதே… அம்மா என்று அழைக்காத உயிர்களாகத் தமிழரில் பலர்… அம்மா என்று அழைக்காத உயிர்களாகத் தமிழரில் பலர்… அப்பா என்று அழைக்காத உயிர்களாகத் தமிழரில் பலர்… இப்படி இருக்கையில்… பெத்தபிள்ளை, பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளை, கொப்பாட்டப்பிள்ளை என எத்தனை உறவுகளை நம்மாளுகளுக்குத் தெரியும். தமிழில் உறவைச் சொல்லி, உறவைப் பேண நம்மாளுகளால் முடியாவிட்டால் தமிழ் எப்படி வாழும்!

“முனைவர் இரா.குணசீலன் ஒரு தமிழ் ஆய்வாளர் மற்றும் இலக்கிய வலைப்பதிவாளர் ஆவார்.” எனக் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருக்கிறது. அப்படி ஓர் அறிஞரின் கைவண்ணத்தில் தமிழ் பரம்பரை / தமிழ் தலைமுறை உறவுநிலை பற்றிய பதிவைப் படித்தேன். தமிழ் பரம்பரை உறவுநிலையை எடுத்துக்காட்டாக ஐங்குறுநூற்றுப் பாடலைக் காண்பித்து கீழ்காணும் ஒளிப்படத்தையும் சுட்டித் தொட்டுக்காட்டும் விதம் ஆசிரியரின் கைதேர்ந்த கலை.

படத்தைப் பார்த்தாச்சு, பாட்டைப் படிக்க வேண்டாமா? முனைவர் இரா.குணசீலன் அவர்களின் கைவண்ணத்தைக் காணவேண்டாமா? கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்.
http://www.gunathamizh.com/2014/03/blog-post_15.html

இணைப்பைச் சொடுக்கியாச்சு, பதிவைப் படித்தாச்சு, நாலு வரியில கருத்துச் சொன்னாச்சு என்று இருந்துவிடாதீர்கள். தமிழில் உறவைச் சொல்லி, தமிழர் உறவைப் பேண, உலகத் தமிழரை அணி திரட்ட முன்வாருங்கள். அதற்கு முனைவர் இரா.குணசீலன் அவர்களின் பதிவு உதவுமென்றே எனது தளத்தில் அவரது பதிவை அறிமுகம் செய்கின்றேன்.

இனிவரும் காலத்திலும் இவ்வாறு தமிழுக்காகச் சிறந்த பதிவுகளை வெளிப்படுத்தும் அறிஞர்களின் பதிவுகளை அறிமுகம் செய்யவுள்ளேன். மேலும்,
“தமிழன் தாய்ப் பெயரோ மம்மி
அவன் நாய்ப் பெயரோ ஜிம்மி” என்ற
பாடலைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்; கேட்கலாம்.
http://wp.me/pTOfc-9v

Advertisements

4 thoughts on “நமது உறவுகளைத் தெரியாத நம்மாளுகள்

  1. முனிவரின் பகிர்வை வாசிக்க தவறுவதில்லை…

    சிறப்பான ஒரு தளத்தை அறிமுகம் செய்துள்ளீர்கள்… வாழ்த்துக்கள் ஐயா…

  2. சிறப்பான தளத்தை மிகச் சிறப்பாக
    அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.