தமிழைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்

தமிழா! தமிழைக் கொஞ்சம் எண்ணிப் பாரென்று ஒலிக்கும் இந்தப் பாடலைப் படித்தும் கேட்டும் தூய தமிழ் பேண முன்வாருங்கள்.
எழதியவர்: பாவலர் காசிஆனந்தன்
பாடியவர்: புஸ்பவனம் குப்புசாமி

தமிழன் தாய் பெயரோ மம்மி
அவன் நாய் பெயரோ யிம்மி
தமிழ்லண்ணன் அழுகிறேன் விம்மி விம்மி .
(தமிழன் தாய்)

சீனாவில் பிறந்திருந்தால் சீன மொழி கேட்டிருப்பேன்
செர்மனியில் பிறந்திருந்தால் செர்மன் மொழி கேட்டிருப்பேன்
ஏனோ நான் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டேன்
ஏனோ நான் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டேன்
இங்கிலாந்து மொழி கேட்டேன் கண்ணீர்விட்டேன்
இங்கிலாந்து மொழி கேட்டேன் கண்ணீர்விட்டேன்
(தமிழன் தாய்)

அன்பு பொங்க பொங்கல் இடும் தமிழ் நாடு தொலைந்ததய்யா
ஆங்கிலேயன் கேக்கு வெட்டும் பண்பாடு நுழைந்ததய்யா
புண்ணாகி தமிழ் நெஞ்சம் துடிக்குதையா
புண்ணாகி தமிழ் நெஞ்சம் துடிக்குதையா
புயல் காற்று தமிழ் மண்ணில் அடிக்குதய்யா
புயல் காற்று தமிழ் மண்ணில் அடிக்குதய்யா
(தமிழன் தாய்)

திரைபடத்தில் தமிழ் நடிகை ஆங்கில கூத்தாடுகிறாள்
அரைகுறையாய் வந்து எங்கள் ஆவியில் மண் போடுகிறாள்
சிரிப்பதற்கா பாடுகிறேன் இல்லையில்லை
சிரிப்பதற்கா பாடுகிறேன் இல்லையில்லை
சிந்தை நொந்து வாடுகிறேன் தமிழ்த்தாய் பிள்ளை
சிந்தை நொந்து வாடுகிறேன் தமிழ்த்தாய் பிள்ளை
(தமிழன் தாய்)

காதலெனும் தூய தமிழ் பாழாச்சு பாழாச்சு
கல்லூரி மாணவர்கள் சைட் அடிக்கும் நாளாச்சு
ஏது செய்வேன் ஏது செய்வேன் கொடுமையய்யா
ஐயா
ஏது செய்வேன் ஏது செய்வேன் கொடுமையய்யா
இனமானம் என்பதெல்லாம் பொய்யா பொய்யா
இனமானம் என்பதெல்லாம் பொய்யா பொய்யா
(தமிழன் தாய்)

Advertisements

2 thoughts on “தமிழைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.