எழுத்தில, பேச்சில தமிழ் வருமா?

பிறமொழிக் கலப்பால் தமிழ் சாகிறதே!

தமிழில் 25இற்கு மேற்பட்ட மொழிகள் நுழைந்துள்ளதாம். அதெப்படி முடியும் என்ற கேள்வி எழுகிறது. போத்துக்கீசர், ஒல்லாந்தர், பிரிட்டிஸ்காரர் எம்மை ஆண்ட போதும், தமிழர் வணிக நோக்கில் எட்டுத்திக்கும் சென்று வந்தமையாலும் ஏனைய மொழிகள் தமிழிற்குள்ளே நுழைய வாய்ப்பு இருந்திருக்கிறது.

இத்தனை மொழிகளையும் வழக்கப்படுத்திப்போட்டு, இப்ப இவற்றைத் தமிழிலிருந்து அகற்றினால் தூய தமிழ் வரும் என்றாலும் இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை. பழகுவது இலகு விலக்குவது முடியாத ஒன்றே. ஆயினும், பிறமொழிச் சொல்களை நீக்கிய பின் பேசுகிற தமிழே தூய தமிழ் என்போம்.

“பழங்காலம் முதல் ஓலி,எழுத்து வடிவமுடைய நம் தமிழ் மொழி! இத்தமிழ் மொழி, ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், சிங்களம், டச்சு, போர்ச்சுக்கீசியன், உருது, துருக்கி, பாரசீகம், அரபு, மலாய் எபிரேயம் பிரெஞ்சு, கிரேக்கம், சீனம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி போன்ற பிறமொழித் தாக்குதல்களால் சிக்கித் தவித்துக்கொண்டுள்ளது.” என அறிஞர் ஒருவர் தனது இணையப் பக்கத்தில் தெரிவிக்கின்றார்.

“அந்த ஆசாமிக்கு, ஆயாவைப் பற்றித் தெரியாது. ஏதோ அட்வைஸ் பண்ணியிருக்கிறார். ‘மக்கரான உங்க வண்டியைத் திருத்துங்க’ என்று ஒதுங்கிவிட்டாள்.” இதில பாருங்கோ:
மக்கர் (அரபி மொழி) = இடக்கு/பழுது(தமிழ்)
அட்வைஸ்(ஆங்கிலம்) = அறிவுரை(தமிழ்)
ஆயா(போர்த்துக்கீசம்) = செவிலி/பணிப்பெண்
ஆசாமி(உருது மொழி) = ஆள்(தமிழ்)
ஆகிய பிறமொழிச் சொல்கள் இருக்கே. இனியாவது இவற்றை நீக்கிய பின் பேசுகிற தமிழே தூய தமிழ் என்போம்.

“தமிழின் சிறப்பைக் கெடுக்கவேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்ட தமிழ்ப் பகைவர்கள் சிலர், ”தனித் தமிழ்ச் சொற்கள் சிலருக்குப் புரியவில்லை. ஆதலால் புரியும் தமிழில் எழுதுகிறேன்” எனக் கூறிப் பிறமொழிச் சொற்களை வேண்டுமென்றே புகுத்தித் தமிழை அழித்து வருகின்றனர்.” என அறிஞர் ஒருவர் தனது இணையப் பக்கத்தில் தெரிவிக்கின்றார்.

தனித் தமிழ்ச் சொல்கள் சிலருக்குப் புரியவில்லை என்பதை விட, தெரியவில்லை என்றே கூறலாம். எனவே, தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலி படித்தால் தான் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும். அதற்கு இலகுவாக ஓர் தமிழ் – பிறமொழிச் சொல் அகரமுதலியின் விரிப்பைத் தருகின்றேன்.

நூல் : பிறமொழிச் சொல் அகராதி
ஆசிரியர் : எஸ்.சுந்தர சீனிவாசன்
பதிப்பாசிரியர் : விகரு.இராமநாதன்
முதற்பதிப்பு : அக்டோபர், 2005
வெளியீடு : சிறி இந்து பப்ளிகேஷன்ஸ்
வெளியீட்டாளர் முகவரி :-
இல:40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,
(உஸ்மான் ரோடு), த.பெ.எண் : 1040,
தியாகராய நகர் – சென்னை 600 017.

உலகெங்கும் தூயதமிழைப் பேணுவதாயின், தமிழர் ஒவ்வொருவரினதும் செயலாக எழுத்திலோ பேச்சிலோ பிறமொழிச் சொல்களை நீக்கிய பின் தூய தமிழைப் பேண முன்வரவேண்டும்.

 

 

 

 

Advertisements

8 thoughts on “எழுத்தில, பேச்சில தமிழ் வருமா?

  1. என்ன செய்வது?…. தமிழ் பல மொழிகளின் ஆதிக்கத்தால் பாடுபடுகிறது. தூய தமிழ் பேண ஆங்கிலம் ஒன்றைத் தவிர்த்தாலே பாதி கடலைக் கடந்தது போன்று.

    நன்றி,
    http://www.tamilpriyan.com

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.