தமிழரும் நாடும்

மொறிசியஸ் நாட்டின்
முதுகெலும்பே தமிழர் தான்
அரசிலும் சரி
அரச பணத் தாளிலும் சரி
தமிழ் பங்கெடுத்தாலும் – அங்கே
வாழ்பவர்களுக்கு
தமிழே தெரியாதென்றால்
பட பட எனப் பிறமொழி பேசும்
ஏனைய நாட்டவரும்
தமிழே தெரியாதவர் ஆகலாமே!
நாளுக்கு நாள்
உலகெங்கும் மாற்றங்கள்…
நாட்டுக்கு நாடு
நம்மாளும் முன்னேற்றம்…
மாற்றங்ககளும்
முன்னேற்றங்களும்
தமிழ் பேச முடியாதவாறு
நம்மாளுகளை மாற்றுகிறதே!
அன்று
உலகின் அரைப்பங்கு
தமிழரின் குமரிக்கண்டம் தான்
இன்று
உலகம் எங்குமே தமிழர் தான்
நாளை
தமிழருக்கென்று
நாடொன்று இருக்குமா?
தமிழைப் பேச மறந்த
தமிழர் மட்டும்
பதிலைக் கூறுங்களேன்!
தூய தமிழ் பேசத் தெரிந்தவர்கள்
வாழும் இடங்களை
தமிழர் வாழும் இடமென்று
முழக்கமிட்டுக் கூறிக்கொள்ள
தமிழைப் பேச மறந்தோரால்
எப்படித்தான் முடியும்?

Advertisements

2 thoughts on “தமிழரும் நாடும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.