தமிழைப் படியுங்க…

தமிழைப் படியுங்க…

தமிழர்களே! தமிழர்களே!
நம்ம வாயாலே பேசுவது
தமிழா?
நம்ம கையாலே எழுதுவது
தமிழா?
இல்லை! இல்லை!
ஆங்கிலம் தொட்டுப் பல மொழிகள்…
சொன்னாலும் நம்ப மாட்டியள்
தமிழாய்த் தெரியும் வடமொழியுமே…
நாங்கள் வெளிப்படுத்துகிறோம்!
தமிழைப் படியுங்க…
தமிழைப் பேசுங்க…
அட!
பிறமொழிகளைக் குப்பையில போட்டிட்டு
நற்றமிழைப் பேசுங்க என்றால்
எத்தனை எத்தனை
நொண்டிச் சாட்டுகள் சொல்லுறியளே!
சீனா தொடங்கி
அவுஸ்ரேலியா, ஆசியா,
ஐரோப்பா, ஆபிரிக்கா,
அமெரிக்கா வரை
தேடிப் போய் இருந்து கொண்டு
தமிழைப் படித்து
பிழைப்பு நடத்தேலுமா என்கிறியளே!
இந்தியா, இலங்கை உட்பட
அவுஸ்ரேலியா தொடங்கி
ஆபிரிக்கா வரை
தமிழ் பேசும் மக்கள்
வாழ்ந்தார்களாமே!
உங்களைப் போன்றவர்கள்
புலம்பெயர் நாட்டு மொழிகளைப் படித்து
பிழைப்பு நடாத்தப் போனதாலும்
இடையிடையே தலையை நீட்டிய
கடற்கோள் காவுகொண்டதாலும்
தமிழரும் தொகையில் சுருங்க
தமிழ்
இனி மெல்லச் சாகும் நிலையில்
இருப்பது தெரிகிறதா?
இந்தியாவிலே
தமிழ்நாட்டில் இருப்போரும்
இலங்கையிலே
வடகிழக்கு மற்றும்
மலையகத்தில் இருப்போரும்
நாம்
தமிழரென மார்பிலடித்துச் சொன்னாலும் கூட
தமிழ்
இனி மெல்ல வாழுமா?
தொழிலுக்காக
எந்த மொழியையும் படிக்கலாம்
எதிர்க்கருத்துக் கிடையாது…
ஆனால்,
வாழ்க்கையின் மொழி
தாய்மொழியென்பதை மறக்கலாமோ?
பிள்ளைகளை ஈன்றால் போதுமா?
தாய்ப் பாலொடு
தாய்மொழியாம் தமிழையும் பருக்கிவிடு!
தொழில் முடிந்து வீட்டுக்கு வந்தால்
தமிழாலே
கதைத்துப் பேசி வாழ்ந்திடு!
தமிழைக் கதைத்துப் பேச
ஆளில்லை என்றால்
தமிழர்களுடன் உறவை வைத்திடு!
உலகின் மூலை முடுக்கெங்கணும்
வாழும் தமிழர் எல்லோருமே
தமிழைப் படித்து – உலகெங்கும்
தமிழாலே தொடர்பாட வேண்டுமே!
மாசி மாதம் இருபத்தியொன்று
தாய் மொழி நாள்
உலகெங்கும் கொண்டாடப்படுகையிலே
தாய் மொழியாம் தமிழை மறந்த
உலகத் தமிழ் உறவுகளே
தமிழைப் படிக்க முன் வாருங்களேன்!


தாய் மொழி நாள் எப்படித் தோன்றியது பற்றிய குறிப்பைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://wp.me/p1kCrm-wI

Advertisements

6 thoughts on “தமிழைப் படியுங்க…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.