பார்வையிடுங்கள்! பங்கெடுங்கள்! பயனீட்டுங்கள்!

இணையத்தள முகவரிகளின் திரட்டு (Web Directory) பல இருப்பதை யாவரும் அறிவீர். அதேவேளை, வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) எனப் புதிதாக ஒன்று தலையை நீட்டியிருப்பதை நீங்கள் அறிவீர். இவர்கள் உலகெங்கும் தூய தமிழைப் பேண உதவும் வகையில் வலைப் பதிவர்களின் தமிழ்ப் பக்கங்களைத் திரட்டுவதாகக் கூறுகின்றனர். அவர்களின் கருத்துகளைக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கி பார்வையிடுங்கள்!

வணக்கம் தமிழ் உறவுகளே!
http://tamilsites.doomby.com/pages/

எமது வேண்டுகோள்
http://tamilsites.doomby.com/blog/-.html

எமது வழிகாட்டல்
http://tamilsites.doomby.com/blog/–1.html

எமது செயற்பாடுகள்
http://tamilsites.doomby.com/blog/–2.html

என்னைப் பொறுத்தவரை இத்தளத்தில் சிறந்த பதிவர்களின் பக்கங்கள் இணைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறேன். இத்தளத்தில் பலர் ‘தமது பக்கங்களை இணைக்க முடியவில்லை’ என்று குறைகூறுகின்றனர். அதாவது தளங்களை இணைப்பதற்கான படிவத்தில் (Form) உள்ள Anti-spam ஒப்புதல் (அனுமதி) தரவில்லையாம்.

இப்படிவத்தில் Anti-spam பெட்டியில் Type the letters on black background: எனக் குறிப்பிடப்பட்டிருப்பின் கறுப்புப் பின்னணியில் உள்ள எழுத்துகளைத் தட்டச்சுச் செய்யலாம். அதேவேளை Anti-spam பெட்டியில் Scroll Bar தோன்றியிருப்பின் 100% அதனை உருட்டி விடலாம். இவ்வாறு இச்சிக்கலைத் தீர்க்க முடியாவிடின், இப்படிவத்தில் கேட்கப்பட்ட தகவலை yarlpavanan@hotmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நானே உங்கள் சார்பாக உங்கள் தளங்களை இணைத்து விடுகிறேன்.

எனது பார்வையில் இத்தமிழ் பக்கங்களின் தொகுப்பில் (Directory) உள்ள தளங்களை உலகெங்கும் அறிமுகம் செய்வதன் மூலம் அத்தளங்களை நடாத்தும் அறிஞர்களின் அறிவை உலகத் தமிழர் படிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக முடியும். இத்தொகுப்பில் (Directory) இணைந்த தளங்களின் அறிஞர்கள் எல்லோரும் தமிழை வாழவைக்க, உலகெங்கும் தமிழைப் பேண முன்வைக்கும் கருத்துகளை உலகெங்கும் வாழும் தமிழர் பின்பற்றி, எங்கள் தாய்த் தமிழைச் சாகவிடாது வாழவைக்க முன்வரவேண்டும்.

உலகெங்கும் தூய தமிழைப் பேண வழிகாட்டும் “எமது இலக்கு, கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களை இணைப்பதே!” என http://thamizha.2ya.com/ தளம் வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ப நாமும் வலைப்பதிவுகளை நடாத்தும் அறிஞர்களை இணைத்துவிட முயற்சி செய்வோம். மேலும் சமயம், அரசியல், பாலியல், மற்றும் குமுகாய (சமூக) த்திற்குத் தேவையற்ற தளங்களை இணைக்க முடியாதென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் தமிழுக்காக, தூய தமிழைப் பேண, உலகெங்கும் தமிழைப் பரப்ப முயலும் தளங்களை இணைக்க முன்வாருங்கள்.

எனவே, எல்லோரும் http://thamizha.2ya.com/ தளத்தைப் பார்வையிடுங்கள்! அத்தள முயற்சிகளில் பங்கெடுங்கள்! அத்தளத்திலிருந்து பயனீட்டுங்கள். அதேவேளை தங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் இம்முயற்சியைத் தெளிவுபடுத்துங்கள். அத்துடன் ஆளுக்கு நூறு சிறந்த தமிழ் தளங்களை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (Directory) தொகுப்பில் இணைத்து உதவுங்கள். அதனால், உலகெங்கும் வாழும் தமிழர் அத்தனை தளங்களையும் உலாவிப் பார்த்து நல்லறிவைத் தேடிப் பொறுக்கிப் படிக்க நாம் உதவியதாக இருக்குமே!

Advertisements

4 thoughts on “பார்வையிடுங்கள்! பங்கெடுங்கள்! பயனீட்டுங்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.