ஈழத்து யாழ்பாணத்து 01/02/2014 உதயனில்…

என் வீட்டில் உதயன் பத்திரிகை பார்த்த போது, 01/02/2014 உதயனில் பதினைந்தாம் (பலதும் பத்தும்) பக்கத்தில் “உலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளரின் பரபரப்புத் தகவல்” என்ற தலைப்பில் ஒரு செய்தியைப் படித்தேன்.

மேலும், “தமிழின் சிறப்பைத் தமிழர்கள் மறந்து வரும் நிலையில் உலகின் மூத்த வலிமையான மொழி தமிழ் என்ற உண்மையை அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ் கல்லியர் கண்டறிந்து எடுத்துக் கூறி வருகின்றார். தமிழின் சிறப்பை இனிக் கடல்கள் கடந்தும் உலகம் எங்கும் போற்றுவார்கள்! தமிழர் நாமும் எமது அன்னை மொழியைப் போற்றிப் பாதுகாத்துப் பேசி மகிழ்வோம்.” என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனது இனிய உறவுகளே! “உலகின் முதல் மொழி தமிழ்” என்று இது போன்று சான்றுப்படுத்த வல்ல செய்தி அல்லது தகவலைப் பகிர்ந்து எங்கட பிள்ளை, குட்டிகள் தமிழ் மீது விருப்பம் கொள்ள வைக்க முன்வாருங்கள்.

Advertisements

4 thoughts on “ஈழத்து யாழ்பாணத்து 01/02/2014 உதயனில்…

 1. வணக்கம்
  அண்ணா.

  தகவலுக்கு நன்றி… நீங்கள் சொல்வது போல… எமக்கு இரு கண்கள் போல…
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.