தமிழ் இனி மெல்லச் சாகாது!

தமிழுக்குள் நுழைந்த
பிற மொழிகளை ஒதுக்கி வைத்தால்
எங்கள் தமிழ் தூய தமிழே
அதுவே
எங்கள் தாய் மொழி!
இன்று வரை
தமிழ் எனும் கடலை
நீந்திக் கடந்தவர்
எவருமில்லையாமே…
எம் தாய் மொழியை
கற்றுத் தேற
இன்னும்
எவ்வளவு நாள் பிடிக்குமோ
எனக்கும் தெரியவில்லையே!
தோழர்களே, தோழிகளே
நாம்
கற்ற தாய் மொழி
கைப்பிடி மண்ணளவாயினும்
உலகளவு தாய் மொழியை
கற்கவேண்டி இருப்பினும்
முடிந்தளவு
பிற மொழிகளை ஒதுக்கி வைத்தால்
நம் வாயால் வெளிவருவது
தூய தமிழ் என்போம்!
ஆகக்குறைந்தது
ஷ, ஸ, ஹ, ஜ போன்ற
வடமொழி எழுத்துக்களை
எழுத்து வழக்கிலிருந்து
நீக்கினால் கூட
செந்தமிழ் புழக்கத்தில் வருமே!
கலப்படத் தமிழ்
பப்படமாகி விடும்
ஆனால்,
தனித் தூய தமிழ்
நீடூழி வாழும்!
இயன்ற வரை
எல்லோருமிணைந்து
தூய தமிழ் பேணப் புறப்பட்டால்
தமிழ் இனி மெல்லச் சாகாது!

 

Advertisements

2 thoughts on “தமிழ் இனி மெல்லச் சாகாது!

  • வளருமா? என்பதை விட
   வாழுமா? என்ற கேள்வியே
   அதிகம்…
   தமிழ் வாழும்
   இன்றைய தலைமுறையினர்
   தமிழை வாழவைப்பர்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.