பண்பாட்டைப் பேணுவதெப்படி?

வீட்டைக் கூட்டி
சுற்றுவட்டத்தை அழகுபடுத்தி
முற்றத்தில் கோலமிடும் பண்பாடு
நாள் தோறும் இடம் பெறுவது
நம்ம தமிழ் நாட்டில் தான்!
இலங்கையிலோ
சிறப்பு நாட்களில் மட்டுமே
கோலமிடுவது வழக்கமெனில்
நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில்
எவ்வெவ் கோலத்தில்
தமிழர் வாழ்கின்றனரோ
கடவுளுக்குத் தான் வெளிச்சம்!
அட கடவுளே!
தமிழர் உலக நாடெங்கும்
உலாவுறாங்க தான்…
அங்கங்கே அவங்க வாயாலே
தமிழையே பேச மாட்டேங்கிறாங்க…
இவங்க எல்லோரும்
உலக நாடெங்கும்
தமிழர் பண்பாட்டை
எப்படிப் பேணப் போறாங்களோ
இதுவரை தெரியவில்லையே!

தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் இதனைப் பதிவு செய்த வேளை:
“தமிழர்கள் தமிழ் பேச மறுப்பது தான் வேதனைக்குரியது” என்று நண்பர் வினோத் (கன்னியாகுமரி) அவர்கள் தெரிவித்தார்.
” ‘முடியாது’ என்பது மனித அகரமுதலியில்(அகராதியில்) இருக்க முடியாதே! எல்லோரும் மொழி மீது பற்று வைத்தால் தூய தமிழை வெளிப்படுத்தலாம்.” என்று நானும் பதிலளித்தேன்.

Advertisements

4 thoughts on “பண்பாட்டைப் பேணுவதெப்படி?

 1. வணக்கம்
  சரியாக சொன்னீர்கள் ….பதில். வேறுநாட்டுக்கு சென்றால் எப்படி அந்த நாட்டுமொழியை கற்கிறோம் அதைய போல…நம் தமிழ் மொழியை பிறநாட்டவர்கள் மிகச்சிறப்பாக கற்றுள்ளார்கள் உதாரணமா.
  இலங்கை இந்து சமயஒன்றிய தலைவர். ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா. அவர்கள் ஒரு அமெரிக்கர்…. அவர் திருகோணமலையில்… சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.மனிதனால் நினைத்தால் எதையும் செய்யமுடியும்…

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • “ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா. அவர்கள் ஒரு அமெரிக்கர்….” என்ற எடுத்துக்காட்டு உண்மை தான்

   பாரதிக்கு 32 மொழிகள் தெரியும்; தனிநாயகம் அடிகளாருக்கு 18 மொழிகள் தெரியும்; ஆனால், இருவரும் தமிழைப் பேணியவர்களே!

   அப்படி நம்மாளுகளும் எத்தனை மொழிகளையும் படிக்கலாம். ஆனால், நம்ம தமிழ் மொழியைப் பேண வேண்டும்.

 2. தமிழராகிய நாமே நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை பேணாவிட்டால் பின் யார் பேணுவார்! நான் படித்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் http://sangamtranslationsbyvaidehi.com/
  “நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல், கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு, அகம், புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”.

  • தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
   சிறந்த கருத்துப் பகிர்வுக்கான இணைப்பைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
   எனது வாசகர்களே!
   http://sangamtranslationsbyvaidehi.com/ என்ற தளத்தைப் பார்வையிடுங்கள்.
   தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.