பாலமுருகன் தமிழரிடம் சீறிப் பாய்கிறான்.

எல்லோருக்கும் நத்தார், ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு/ தைப்பொங்கல் வாழ்த்துகள்.


நான் “தூய தமிழ் பேண வாருங்கள்” என ஆயிரம் பதிவுகளைப் பதிந்தாலும் தம்பி பாலமுருகன் அவர்களின் பேச்சு அவற்றை விஞ்சி நிற்கும். தம்பி பாலமுருகன் தமிழ்நாட்டு நிலைமையைச் சுட்டிக்காட்டித் தமிழரிடம் சீறிப் பாய்கிறான். ஆனால், பாலமுருகனின் சீறிப் பாய்ச்சல் உலகெங்கும் வாழும் தமிழரின் உள்ளத்தில் மாற்றத்தைத் தரவேண்டும்.

“பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டது போன்று; தமிழை எந்த உறவுகளுமற்ற (அநாதை) இல்லத்தில் விட்டாய்?” என்று தம்பி பாலமுருகன் கேட்கையில் என்னுள்ளத்தில் முள்ளால் குத்தியது போன்று இருந்தது. பாலமுருகன் தமிழ்நாட்டு நிலைமையைச் சுட்டிக்காட்டினாரென ஏனைய நாட்டவர் சும்மா இருந்துவிட முடியாது.

எனது யாழ்பாணத்திலும் எனது ஈழத்திலும் பாலமுருகன் சுட்டிக்காட்டிய படி நடக்குது. 2011 சித்திரையில் தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த போதும் சென்னையில் நான் கண்ட காட்சியைத் தான் பாலமுருகன் வெளிப்படுதியுள்ளார். உலகெங்கிலும் தமிழர் தமது மொழி அடையாளத்தை வெளிப்படுத்தத் தவறுவதால், தமிழர் என்ற அடையாளத்தையும் இழக்கின்றனர்.

தமிழர் என்று சொல்லிக்கொண்டு எந்த நாட்டில் இருந்தாலும் மொழி அடையாளத்தை வெளிப்படுத்தாத ஒவ்வொருவருக்கும் தம்பி பாலமுருகன் பேச்சு நல்ல பாடமாகட்டும். இவ்வொளி ஒலி (Video Clip) நாடவை தமிழர் ஒவ்வொருவரும் காதில் போட்டுத் தூய தமிழ் பேண முன்வருவீர்கள் என நம்புகிறேன்.

Advertisements

2 thoughts on “பாலமுருகன் தமிழரிடம் சீறிப் பாய்கிறான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.