வாசகர் உள்ளம் நிறைவடைய…

உங்கள் படைப்புகள் எளிதில் வாசகரைச் சென்றடைய, அதன் தரத்தை உயர்த்த, அதனை வாசித்த பின்னர் வாசகர் கூறும் கருத்துக்கள் பெரிதும் உதவும். எனவே, உங்கள் படைப்புகளுக்கு எவரும் கருத்துத் தெரிவத்திருந்தால், அதற்குத் தெளிவான பதிலைக் கூறுங்கள். அப்போது தான் வாசகர் உங்கள் படைப்புகளை உயர்வாக மதிக்க வாய்ப்பிருக்கும்.

அதேவேளை, மாற்றாரின் படைப்புகளை நீங்கள் வாசித்த பின்னர் கூறும் கருத்துக்களை வைத்தும் உங்களைச் சிறந்த படைப்பாளியாகக் கருதமுடியும். அதாவது, உங்கள் கருத்துகள் உங்களை அடையாளப்படுத்துகிறது என்பதை மறக்க வேண்டாம். ஆக மொத்தத்தில் வாசகரைக் களிப்பூட்ட எழுதுகின்ற நாம், வாசகர் உள்ளம் நிறைவடைய ஆவன செய்ய வேண்டும்.

மாற்றாரின் படைப்புகளுக்கு, கருத்துக் கூறும் போது வாழ்த்தினால் போதாது குறை, நிறைகளைக் கூறிச் சிறந்த படைப்பாளியாக உயர்வடைய ஊக்கப்படுத்துங்கள். மாற்றாரின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்துத் தெளிவான விளக்கத்தை வழங்கினால் உங்கள் படைப்புகளுக்கு உரிய வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

நாங்கள் அனைவரும் வாசகர்களை மகிழ்வூட்டச் சிறந்த படைப்புகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த ஒன்றுபடுவோம். நண்பர்களின் படைப்புகளைப் படிப்போம்; நன்றாகத் தாக்குரை செய்வோம்; நண்பர்களது படைப்புகளைத் திறனாய்வு செய்வோம். எல்லாம் வாசகர்கள் மகிழ்வடையக் கூடியதாக அமைய வேண்டும். அப்போது தான் உலகெங்கும் தமிழைப் பேணிப் பரப்பும் பணியைச் செய்யலாம்

Advertisements

8 thoughts on “வாசகர் உள்ளம் நிறைவடைய…

  1. நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். எழுதுபவர்கள் நிச்சயம் அடுத்தவரின் படைப்புகளைப் படித்து பண்புடன் தங்களது கருத்துக்களை சொல்லவேண்டும்.
    சிறப்பான பதிவிற்கு நன்றி, வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.