மாணவர்கள் செய்யும் ஆய்வுகள்

உயர்நிலை மாணவர்களை மக்கள் மத்தியில் அறிவாளிகள் என்றும் சிறந்த முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்றும் மக்களே கருதுவதால், அவர்கள் செய்யும் ஆய்வுகள் உலகில் உள்ள எல்லா நாடுகளையுமே தமிழர் பக்கம் திரும்பச் செய்ய முடியுமே!

இளநிலை (Bachelor Degree), முதுநிலை (Master Degree), முனைவர்(Dr/Phd) ஆகிய வகுப்புகளில் படிக்கின்ற தமிழ் மாணவர்கள் எவ்வெவ் துறைகளில் ஆய்வுகளைச் செய்வதால், உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தமிழைப் பேணவும் தமிழர் அடையாளங்களை வெளிப்படுத்தவும் அவ்வாய்வுகள் உதவும்?

1. மூவேந்தர் ஆட்சியும் குமரிக்கண்ட வரலாற்று ஆவணங்களும்
2. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கடற்கோளால் (Tsunami) குமரிக்கண்டம் துண்டாகி இந்தியாவாகவும் இலங்கையாகவும் பிரிந்தமைக்கான சான்றுகள்
3. தமிழைப் பேணவும் வளர்க்கவும் தமிழரசர்கள் உருவாக்கிய முதல், இடை, கடை ஆகிய மூன்று தமிழ்ச் சங்கங்களும் (பாண்டிய மன்னன் பேணிய தமிழ்ச் சங்கங்கத்திலே நிகழ்ந்த பா(கவிதை) புனையும் போட்டியே திருவிளையாடல் படத்தில் வருகிறது) பேணப்பட்ட காலப் பகுதிகள்
4. தமிழ் செம்மொழியாக இருப்பதற்கான தகுதிகள்
5. தமிழ் தொன்மையான மொழியென்பதற்கான சான்றுகள்
6. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழரென்பதற்கான சான்றுகள்
7. தமிழர் பண்பாட்டையும் தூய தமிழ் மொழியையும் பேணுவதோடு உலகம் அவற்றைப் பின்பற்ற வைக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
8. தமிழரின் இலங்கையை சிங்களவரின் இலங்கையாக உரிமை கோருவது போல உலகில் மறைக்கப்பட்டுள்ள தமிழர் நாடுகள் (அதாவது உலகில் தமிழர் ஆட்சி நிலவிய நாடுகள்) பற்றிய சான்றுகள்
9. எல்லாம் தேவை தான். ஆனால் ஒரு மாணவர் ஒரு தடவை ஒன்றையே ஆய்வு செய்யலாம்

மேலேயுள்ளவை எனது எண்ணக்கருக்கள். தமிழறிஞர்களே! உங்கள் எண்ணக்கருக்களையும் இங்கு பகிருங்கள். நாளைய தலைமுறை மாணவர்களுக்கு உலகெங்கும் தமிழைப் பேண, உலகமே தமிழின் பக்கம் திரும்பச் செய்யக்கூடிய ஆய்வுகளைச் செய்து வெளியிடுமாறு வழிகாட்டுவோம்.

Advertisements