அப்படி… இப்படி… உப்படித்தான்…

அப்படித்தான், இப்படித்தான், உப்படித்தான் நாங்கள் தமிழனென்று சொன்னாலும் பண்பாடு, ஒற்றுமை, அன்பாக உறவைப் பேணல் என எதுவுமில்லை எனின் எப்படித்தான் உலகம் எம்மைத் தமிழனென்று ஏற்கும்.

அப்படித்தான் தமிழன் என்றாலும்
இப்படித்தான் பிறமொழி பேசினாலும்
உப்படித்தான் தமிழை மறந்தாலும்
எப்படித்தான் உலகம் நம்பும்
“நாம் தமிழனென்று…”

அப்படித்தான் பண்பாடு என்றாலும்
இப்படித்தான் மேல்நாட்டுடை உடுத்தாலும்
உப்படித்தான் நம்முடைகளை மறந்தாலும்
எப்படித்தான் உலகம் போற்றும்
“தமிழர் பண்பாட்டை…”

அப்படித்தான் வேற்றுமை என்றாலும்
இப்படித்தான் முரண்டு பிடித்தாலும்
உப்படித்தான் அடிபிடி மோதலானாலும்
எப்படித்தான் உலகம் மதிக்கும்
“தமிழர் ஒற்றுமையை…”

அப்படித்தான் அறிவு இருந்தாலும்
இப்படித்தான் பண்பாட்டைப் பேணினாலும்
உப்படித்தான் ஒற்றுமையாய் இருந்தாலும்
எப்படித்தான் உலகம் ஏற்கும்
“தமிழர் அடையாளத்தை…”

அப்படித்தான் தமிழனென்று முழங்கினாலும்
இப்படித்தான் தமிழைப் பாடினாலும்
உப்படித்தான் இலக்கியம் படைத்தாலும்
எப்படித்தான் உலகம் விரும்பும்
“தூயதமிழைப் பேணாவிட்டால்…”

அப்படித்தான், இப்படித்தான், உப்படித்தான் அன்பான அரவணைப்பும் ஒற்றுமையும் பண்பாட்டைப் பேணுவதும் இருந்தாலும் கூட தூய தமிழைப் பேணுவதனாலேயே உலகம் எம்மைத் தமிழனென்று விரும்பும்.

Advertisements

4 thoughts on “அப்படி… இப்படி… உப்படித்தான்…

 1. அப்படி, அப்பக்கம், அந்த, அ – இவையனைத்தும் சேய்மைச் சுட்டு (தூரத்தில் இருப்பதைச் சுட்டுவது) என்றும்,
  இப்படி, இப்பக்கம், இந்த, இ – இவையனைத்தும் அண்மைச் சுட்டு (அருகில் இருப்பதைச் சுட்டுவது) என்றும் தமிழ் இலக்கணம் கூறும்.
  இடையில் இருக்கும் “உ“ என்பது நம் அருகில் (அண்மையில்) இருந்தாலும், நமக்கு முகத்தைக் காட்டாமல் வேறுபக்கம் பார்த்திருக்கிற (சேய்மை) ஒருவரைச் சுட்ட “உப்பக்கம்“ எனும் சுட்டு இருந்திருக்கிறது. இது, இப்போதும் யாழ்ப்பாணத்தில் மட்டும் வழக்கில் இருக்கிறது என்று தெரிகிறது, எடுத்துக்காட்டாக குறளில் (ஆள்வினையுடைமை அதிகாரத்தின் கடைசிக்குறள் -எண்620 )வரும் “உப்பக்கம்“ என்னும் சொல் புறமுதுகு காட்டுவதைச் சுட்டுகிறது. ஆய்வைக் கிளறியமைக்கு நன்றி.

  • ஐயா!
   தங்கள் இலக்கிய விளக்கம் மிக்க பயனுள்ளது.
   அது, இது, உது
   அந்த, இந்த, உந்த
   அப்பையன், இப்பையன், உப்பையன்
   ஆகிய சுட்டுகள் தமிழிலும் உள…
   யாழ்ப்பாணத்திலும் மலிவாக இருக்கு!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.