உங்களைச் சரிபாருங்கள்…

என்னன்பு
இளைய தலைமுறையினரே!
நீங்கள்
போகும் வழி சரியே!
கொஞ்சம் நில்லுங்கள்…
ஆச்சி, அப்பு கட்டிக் காத்தது
ஒழுக்கமும் பண்பாடும்
உங்கள்
நடை, உடை, பாவனை
அப்படி இல்லையே!
பாட்டன், பூட்டி பேசியது
செம்மொழியாம் செந்தமிழல்லவா
நீங்கள் பேசிக் கொள்வதோ
தமிழாங்கிலமே(தமிங்கிலிஸே)!
இன்றும்
உலகெங்கும்
தமிழனைக் காணவில்லையே…
தமிங்கிலனைத் தானே பார்க்கிறோம்!
இன்றைய நிலை
இப்படி என்றால் பாரும்…
நாளைக்கு
தமிழ் மொழிக்கு என்னாகும்?
தமிழினம் என்றொரு இனம்
உலகில் எங்கேனும் இருக்குமா?

Advertisements

2 thoughts on “உங்களைச் சரிபாருங்கள்…

 1. தங்களிற்கு ஏற்பட்டது நியாயமான பயமே.
  அது தான் வீட்டில் தமிழ் பேசுங்களென்று கூறியபடி உள்ளோம்.
  நமது Nhர் தமிழ் என்பதை உணருகிறார்களில்லையே!
  முயலுவோம்.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.