நற்றமிழ் பற்றிய உங்கள் கருத்தென்ன?

“நற்றமிழ் பற்றிய உங்கள் கருத்தென்ன?” என்ற கேள்வியை உங்கள் முன் வைக்க எண்ணும் போதே எனக்கு அச்சம் (பயம்) தோன்றிற்று. ஒருவாறு என்னைச் சரிப்படுத்தி, கேள்வியை உங்கள் முன் வைத்தாச்சு.

உலகெங்கும் தூயதமிழைப் பரப்பிப் பேணுவோம் என இவ்வலைப் பூவைத் தொடங்கினேன். தூயதமிழ் என்றால் தூய்மையான அல்லது சுத்தமான தமிழ் எனலாம். அப்படியாயின் நல்ல தமிழ் என்றால் என்ன? நன்மை தரும் தமிழ் எனலாம்.

நாம் பேசும் தமிழில் இருபத்தி நான்கு மொழிகளுக்கு மேல் காணப்படுகிறதாம். அப்படியாயின், நாம் பேசும் மொழி நல் + தமிழ் = நற்றமிழ் என்று கூற முடியாதே! அப்ப என்ன தான் பண்ணலாம்?

இருபத்தி நான்கு மொழிகளையும் நம்ம தமிழில் இருந்து அகற்ற வேண்டியது தானே! அது தானே முடியாதே! ஆமாம், நம்மாளுகளுக்கு “எது தமிழ்? எது பிறமொழி?” என்று தெரியாத வேளை நல்ல தமிழ்/ நற்றமிழ் எதுவென்றும் புரியாதே!

நல்ல தமிழ்/ நற்றமிழ் எதுவென விவரிக்கும் நூல்களை எனது மின்னூல் களஞ்சியத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். அதற்கு முன் கீழே நற்றமிழ் பற்றிய சிலரது கருத்தைப் பார்க்கவும்.

நற்றமிழ் பற்றி விக்கிப்பீடியா சொல்வதைப் படியுங்க…
இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம். நல்லதமிழும் தனித்தமிழ் போன்று இயன்றவரை தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது.
மேலும் படிக்க: http://ta.wikipedia.org/s/sqi

நற்றமிழ் பற்றி விக்சனரி அகரமுதலி கூறும் பொருளென்ன…
நற்றமிழ்(பெ) : வேற்று மொழிச் சொற்கள் கலக்காமல் இருக்கும் தமிழ்.
மேலும் படிக்க: http://ta.wiktionary.org/s/3js

என்னை விடப் பெரிய அறிவாளிகள் நீங்கள், எனது உலகெங்கும் தூயதமிழைப் பரப்பிப் பேணும் பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம். எனவே தான் “நற்றமிழ் பற்றிய உங்கள் கருத்தென்ன?” என்ற கேள்வியை முன்வைக்கிறேன்.

Advertisements

2 thoughts on “நற்றமிழ் பற்றிய உங்கள் கருத்தென்ன?

  1. I agree with wickypedia….”…இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம்,,”
    இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி, நடைமுறை வழக்கங்களையும் உள்வாங்கி, வெளிப்படுத்தி எளிமையாக எழுதப்படும் பேசப்படும் தமிழ்மொழியை நற்றமிழ் அல்லது நல்லதமிழ் எனலாம்
    Vetha.Elangathilakam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.