கணினி வழியில் தமிழை வெளிப்படுத்த…

தமிழ் இணையத் தளங்கள் பலவற்றில் நம்மாளுகள் தமிழுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களால் தமிழ் உச்சரிப்பினைத் தட்டச்சுச் செய்கிறார்கள். இது ஒருபோதும் தூயதமிழை உலகெங்கும் பரப்பிப் பேண உதவப்போவதில்லை. எடுத்துக்காட்டாகக் கீழ்வரும் கவிதையைப் பார்க்கவும்.

 

enakku avalai pidikkum

aanaal,

avalai kaathalikka mudiyathe…

ean theriyuma?

aval manamaanavale!

 

இப்படி ஆங்கில உச்சரிப்பில் தமிழ்க் கவிதை எழுதினால் எப்படி வாசித்து விளங்கிக் கொள்வது? சரி! தமிழ்ப்படுத்திப் பார்ப்போமா…

 

எனக்கு அவளைப் பிடிக்கும்

ஆனால்,

அவளைக் காதலிக்க முடியாதே…

ஏன் தெரியுமா?

அவள் மணமானவளே!

 

“அழகான பெண்ணென்றால் விருப்பம் வரலாம். அவளோ மணமானவள் என்றறிந்தால் துயரந்தான்.” என ஒருவர் தன் துயரை ஆங்கில உச்சரிப்பில் பகிர்ந்துள்ளார். ஆங்கிலத்தில் சொல்களை உச்சரிக்கத் தெரியாதோரால் எப்படித் தமிழ்க் கவிதையைச் சுவைக்க முடியும். இதனைத் தமிழில் தட்டச்சுச் செய்திருந்தால், நன்றாக விளங்கிக்கொள்ள உதவியிருக்கும். இவ்வுண்மையை உணர்ந்து ஆங்கில உச்சரிப்பில் தமிழ் பரப்புவதை நிறுத்துங்கள். தமிழைத் தமிழாலே பரப்ப முன்வாருங்கள்.

 

“அடேய்! யாழ்பாவாணா! இணையத் தளங்களில் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துகள் பாவிப்பது தெரியாதா? ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துகளைத் தட்டச்சுச் செய்ய முடியாதென்பதை அறியாயோ? எங்களுக்கும் தமிழ் மீது பற்று இருக்கு… அதனால் தானே, ஆங்கில உச்சரிப்பிலாவது தமிழ் பரவட்டுமென எழுதுகிறோம்.” என்ற உங்கள்  விளக்கத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

 

நானும் ஆங்கிலத்தில் முழு முட்டாள் தான்! அதனாலன்றோ ஆங்கில உச்சரிப்பிலாவது தமிழ் பரப்ப முடியாமல் திணறினேன். ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துச் சிக்கலை நண்பர் ஒருவரிடம் முறையிட்டேன். அவரோ ‘http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/‘ என்ற இணைப்பைச் சொடுக்கினால் கூகிளின் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) தட்டச்சு முறையில் தமிழைப் பரப்பலாம் என்றார்.

 

எனக்கும் கொஞ்சம் கணினி அறிவு இருந்தது. நானும் ‘எழுத்துப்பலகை’ என்றொரு தளத்தை ஆக்கியுள்ளேன். பின்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது தளத்தைப் பாருங்கள்.

http://devkjeevan.webs.com/

எனது தளத்தில் சுட்டெலியால் (Mouse) சொடுக்கியதும் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) எழுத்துகள் திரையில் தோன்றும். அதனைப் படியெடுத்து இணையப் பக்கங்களில் பாவிக்கலாமே! “அடடே! இதில் முழுமை இல்லையே” என்று ஏங்க வேண்டாம். விரைவில் இத்தளத்தில் முழுமை கிட்டும் வண்ணம் மறுசீரமைக்கவுள்ளேன். இதே போன்று மென்பொருள் ஒன்றும் ஆக்கி வெளியிடவுள்ளேன்.

 

எனது முயற்சிகள் முழுமை அடையும் வரை எவராலும் காத்திருக்க முடியாது. அதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். கணினி அறிவிலும் நானொரு சின்னப் பொடியன். என்னை விடப் பெரிய அறிஞர்களின் முயற்சிகளை கீழே அறிமுகம் செய்கிறேன். அவற்றைப் பயன்படுத்தி ஆங்கில உச்சரிப்பில் கருத்துப் பகிராமல், தமிழிலேயே கருத்துப் பகிர முன்வாருங்கள்.

 

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தமிழைப் பெற…

http://english-to-tamil-keyboard.appspot.com/

http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

http://www.islamkalvi.com/web/converter.htm

http://www.utvpkallar.sch.lk/images/school/ramanicom/arial.html

http://www.tamilnenjam.com/unicode.htm

http://ezilnila.com/nila/unicode_writer.htm

 

பிற எழுத்துருவை லதா எழுத்துருவாக மாற்ற

http://www.suratha.com/unicode.htm

http://edu.tamilclone.com/tamil-unicode-converter-online/

http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_b-u.xml

http://www.ucsc.cmb.ac.lk/ltrl/services/feconverter/?maps=t_u-b.xml

http://www.islamkalvi.com/web/tfonts2unicode.htm

http://www.pathidaran.com/anything/UnicodeConvertor.htm

http://kandupidi.com/converter/

 

தமிழ் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) தட்டச்சு மென்பொருளைப் பதிவிறக்க.

 

http://azhagi.com/docs.html

http://ezilnila.com/archives/1172

http://thamizha.com/project/ekalappai

http://www.kuralsoft.com/index_t.htm

அல்லது

http://ezilnila.com/archives/810

http://www.nilapennukku.com/2012/07/tamil-typing-software-download.html

 

என் கண்ணில் சிக்கிய இணைப்புகளைத் தொகுத்துத் தந்துள்ளேன். இவை, ஆங்கில எழுத்துக்களால் தமிழ் உச்சரிப்பினைத் தட்டச்சுச் செய்வோர் நேரடியாகத் தமிழ் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) இல் தமிழை வெளிப்படுத்த உதவுமென நம்புகிறேன். எத்தனையோ அறிஞர்களின் இவ்வாறான வசதிகளைப் பாவித்து கணினி வழியில் தமிழை வெளிப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுவோம் வாரீர்.

 

தூயதமிழை உலகெங்கும் பரப்பிப் பேண மேற்காணும் இணைப்புகளைப் பாவித்து தமிழ் ஒருங்குறி/வார்ப்புரு (Unicode) இல் தமிழை வெளிப்படுத்த வேண்டும். இவற்றைவிடப் பிற இணைப்புகள் இருப்பின் நீங்கள் உங்கள் கருத்தில் வெளிப்படுத்தலாம்.

 

நீங்கள் எந்தவொரு இணையப்பக்கத்திலும் ஆங்கில எழுத்துக்களால் தமிழ் உச்சரிப்பினை வெளிப்படுத்தும் ஆள்களைக் கண்டால் இப்பதிவினை அல்லது இப்பதிவு முகவரியினைச் சுட்டி, அவர்கள் தங்கள் கருத்துகளைத் தமிழில் வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.

Advertisements