கேள்வி-பதில்

கேள்வி:- நூற்றைம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் வீசும் காற்றில் பேசும் தமிழர் பேச்சு காதுகளில் விழுகிறது. அங்கெல்லாம் நம்ம தமிழைப் பேணச் சங்கம் அமைக்கவில்லையாமே? முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என அமைத்து முன்னோர்கள் தமிழைப் பேணியது மறந்திட்டாங்களோ?

பதில்:- என்றைக்கு வெளிநாட்டுக்குப் போனார்களோ, அன்றைக்கே அவர்கள் வெளிநாட்டு மொழிக்காரங்கள் ஆயிட்டாங்களே! அங்கே அவர்கள் வீடுகளுக்குள்ளேயே தமிழில் பேசுவதென்பது ஐயமே! அப்ப, தமிழ் பேசாதவர்கள் எப்படித் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழைப் பேணுவார்கள்!

என் கருத்து : தமிழைப் பேணிய தமிழர் தமிழ் இனி மெல்லச் சாகுமென இருபது சரியா? சரியில்லைத் தான். நாளைய தலைமுறையினருக்கு இன்றைய பெரியோர் தமிழுணர்வை ஊட்டினால் தான் தமிழ் மொழியை அழியாது பேணலாம்!

Advertisements