தமிழா! நீ பேசுவது தமிழா?

 

 

தமிழா! நீ “சொந்தம்” என்று பேசுகிறாய்

“சொந்தம்” என்பது “தெலுங்கு” மொழியே

“சொந்தம்” என்றால் தமிழில் “உரிமை” ஆம்

அப்ப

“சொந்தக்காரங்க” என்றால்

தமிழில்

“உரிமைக்காரங்க” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “சவால்” என்று பேசுகிறாய்

“சவால்” என்பது “அரபு” மொழியே

“சவால்” என்றால் தமிழில் “அறைகூவல்” ஆம்

அப்ப

“சவால் விடுகிறேன்” என்றால்

தமிழில்

“அறைகூவல் விடுகிறேன்” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “வாபஸ்” என்று பேசுகிறாய்

“வாபஸ்” என்பது “பாரசீகம்” மொழியே

“வாபஸ்” என்றால் தமிழில் “திரும்பப் பெறுதல்” ஆம்

அப்ப

“வாபஸ் ஆகிறேன்” என்றால்

தமிழில்

“திரும்பப் பெறுகிறேன்” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “முசியே” என்று பேசுகிறாய்

“முசியே” என்பது “பிரெஞ்சு” மொழியே

“முசியே” என்றால் தமிழில் “ஐயா” ஆம்

அப்ப

“முசியே வாறார்” என்றால்

தமிழில்

“ஐயா வாறார்” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “சினிமா” என்று பேசுகிறாய்

“சினிமா” என்பது “ஆங்கிலம்” மொழியே

“சினிமா” என்றால் தமிழில் “திரைப்படம்” ஆம்

அப்ப

“சினிமாக்காரங்க” என்றால்

தமிழில்

“திரைப்படக்காரங்க” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “ஆசை” என்று பேசுகிறாய்

“ஆசை” என்பது “சமஸ்கிருதம்” மொழியே

“ஆசை” என்றால் தமிழில் “விருப்பம்” ஆம்

அப்ப

“ஆசை கூட” என்றால்

தமிழில்

“விருப்பம் கூட” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “சுனாமி(Tsunami)” என்று பேசுகிறாய்

“சுனாமி” என்பது “யப்பானிஸ்” மொழியே

“சுனாமி” என்றால் தமிழில் “கடற்கோள்” ஆம்

அப்ப

“சுனாமி வரும்” என்றால்

தமிழில்

“கடற்கோள் வரும்” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “தமாஷா” என்று பேசுகிறாய்

“தமாஷா” என்பது “உருது” மொழியே

“தமாஷா” என்றால் தமிழில் “வேடிக்கை” ஆம்

அப்ப

“தமாஷாக்காரங்க” என்றால்

தமிழில்

“வேடிக்கைக்காரங்க” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ “ரகளை” என்று பேசுகிறாய்

“ரகளை” என்பது “கன்னடம்” மொழியே

“ரகளை” என்றால் தமிழில் “குழப்பம்” ஆம்

அப்ப

“ரகளை பண்ணாதீங்க” என்றால்

தமிழில்

“குழப்பம் பண்ணாதீங்க” என்று சொல்லுங்கோவேன்!

 

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொஞ்சம் எண்ணிப்பாரடா

நீ பேசும் மொழிகளை அல்ல…

உன் அம்மா

தாய்ப் பாலோடு கலந்து ஊட்டிய

தாய்த் தமிழ்மொழியை மறந்தால்

உன் நிலைமை என்னவாகுமென

கொஞ்சம் எண்ணிப்பாரடா!

எந்த மொழிக்காரங்க – தன்

சொந்த மொழிக்காரனென்று

உன்னைச் சேர்ப்பானென எண்ண மறந்தால்

நாளை நீ நடைப் பிணம் தானே!

 

குறிப்பு: உறவுகளே! இயன்றவரைப் பிறமொழிச் சொல்களைத் தமிழில் கலந்து பேசுவதைத் தவிர்த்தால், தமிழனென்று சொல்லித் தலை நிமிர்ந்து நடைபோடலாமே!

 

 

Advertisements