அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?

“நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்” (http://wp.me/pTOfc-66) என்ற என் பதிவைப் படித்திருப்பீர்கள். அதில், எனக்கோ போதிய நிறைவில்லை. எனவே தான் ஓரிரு அறிஞர்களின் நகைச்சுவையைப் பகிர முனைந்துள்ளேன். முழுமைப் பயனடைய மிகுதியை அவ்வவ் தளங்களிற்குச் சென்று பாருங்கள்.

நானும் ஒரு பொறுக்கி:

உலகெங்கும் தூய தமிழை நல்ல நகைச்சுவையூடாக நீங்கள் எழுதிப் பரப்புவீர்களென நம்பி; பல தளங்களில் பொறுக்கிய சில நகைச்சுவைகளை கீழே பொறுக்கித் தந்தமையால் நானும் ஒரு நகைச்சுவைப் பொறுக்கியே!

சிலர் இப்படியும் என்னைக் கேலி செய்யலாம்:

அந்தோ, யாழ்பாவாணன் தெருக்கோடியில் உள்ள குப்பை மேட்டில் பழம் தாள்களைப் பொறுக்கிக்கொண்டிருக்கிறாரே! என்ன தான் ஆய்வு செய்யப் போகிறாரோ தெரியவில்லையே!

உயிரழகன்: இல்லாள் இல்லையோ… நீங்களே அடுப்பு மூட்டப் போறியள்…

யாழ்பாவாணன்: ஏன் காணும்?

உயிரழகன்: பழம் தாள்களைப் பொறுக்கிற அழகில படித்தேன்…

யாழ்பாவாணன்: அட எருமை… நான் பொறுக்கிறது பழம் அறிஞர்களின் அறிவைத் தான்…

உயிரழகன்: உதெல்லாம் ஒன்றுக்கும் உதவாதே?

யாழ்பாவாணன்: அட மோடா… பழம் தாள் உதவாட்டிலும் பழம் அறிஞர்களின் அறிவு உதவுமடா!

உயிரழகன்: போடாப் பொறுக்கி!

யாழ்பாவாணன்: அறிவைப் பொறுக்கிப் படிக்காத உனக்கு, உதெல்லாம் உனக்கு ஏறுமே!

உறவுகளே! நான் பொறுக்கிய சில எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன. படியுங்கள்… பின், தூய தமிழில் நல்ல நகைச்சுவையை எழுத முன்வாருங்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறிப்பு:-

சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy) எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும்.

சிரிப்பு:-

துணுக்கு:-

தந்தை: “இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்”?

மகள்:  “மூன்று அப்பா. இரண்டு ஆண். ஒன்று பெண்.”

தந்தை: (திகைப்புடன்) “ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்”;?

மகள்:  “பியர் போத்தலின் மேல் இரண்டு இருந்தன. ரெலிபோன் மேல் ஒன்று இருந்தது”!

கடி:-

அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ?

அரசர்: இல்லை அமைச்சரே! அரியாசனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்

… அதனால் ‘விழுப்புண்’ என்றேன்.

(நன்றி ஆனந்த விகடன், 7-3-82).

வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்…..

“ஹலோ வணக்கம்!”

“வணக்கம்! சொல்லுங்க…”

“வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?”

“அதில்லைங்க”

“எது இல்லை?”

“சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?”

“போன்ல இருந்துதான் பேசறேன்”

“சரி என்ன பாட்டு வேணும்?”

“சினிமா பாட்டுதான்”

“சரி எந்த படத்துல இருந்து?”

“சினிமா படத்துல இருந்துதான்”

“அய்யோ!”

என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்

அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

சான்று: http://ta.wikipedia.org/s/94x

தமிழ் தத்துவங்கள் தளத்திலிருந்து.

பஞ்சம் எப்படி வந்தது?

ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார், ”ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?” ஷா சொன்னார், ”என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!”

ஆங்கிலேயர்கள் யார்?

ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ”ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம், ”நேதாஜி சொன்னார், ”உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.”

ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .

சுடுகாடு எங்கே?

அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ”நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா?” என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவர்கள் , ”ஊர் கோடியில் இருக்குது!“ என்று ஒட்டு மொத்தமாக பதில் கூறினார்கள் .

உடனே , ”ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில் தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்

.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது…“ என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு

சான்று: http://tamilthathuvangal.blogspot.com/p/blog-page.html

சிரிப்பு வருது தளத்திலிருந்து

எழுத்தாளர் நகைச்சுவை

1) இதுவரை நான் எழுதின கதைகள் எழுவுமே திரும்பி வந்ததில்லை

அப்படியா…! வெரிகுட்.

என் அட்ரஸை எழுதினாத்தானே…!

2) அந்த எழுத்தாளர், கதை எழுதலைன்னா கூட பத்திரிக்கைகாரங்க பணம் அனுப்பி வெச்சிடுவாங்க

எப்படி?

இந்த வாரம் கதை அனுப்பாததற்கு நன்றி தெரிவிச்சுதான்…!

3) உங்க படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா?

எதுங்க?

உங்க நாலாவது பெண் மேனகாதான்.

சான்று: http://orecomedythaan.blogspot.com/2009/08/blog-post_21.html

கடுகு தாளிப்பு தளத்திலிருந்து.

நகைச்சுவை எழுதுவது எப்படி. — கடுகு

நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சத விகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சத விகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து, ரசித்து, முயன்று தனது திறமையை அதிகரித்துக் கொள்ளமுடியும்.

நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு, நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் இருக்காது, இருக்க வேண்டிய அவசியமில்லை. கட்டுரையில் வரும் கதா பாத்திரங்கள்,அவர்களின் குண பேதங்கள், பெயர்கள், உரையாடல்கள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டுமொத்தமாக் நகைச்சுவை உணர்வை மனதில் எழுப்ப இவை உதவும்.

சான்று: http://kadugu-agasthian.blogspot.com/2010/05/blog-post_4667.html

சிற்சில தளங்களில் பொறுக்கிய சிலவற்றைப் படித்தால் போதாது. முழுமைப் பயனடைய மிகுதியை அவ்வவ் தளங்களிற்குச் சென்று பாருங்கள்.

Advertisements