நானும் என் எழுத்தும்

எனக்கோ

என் உள்ளம் நோகும் போது

பா(கவிதை)

தானாவே புனைய வருகிறதே!

கவிதைக்குள்

நான்

எண்ணியதை

எழுதமுடியாத போது

கதை கூட

தானாவே புனைய வருகிறதே!

பா(கவிதை), கதை என்பவற்றில்

நுழைக்க முடியாததை

எண்ணும் போது

கட்டுரை எழுத முடிகிறதே!

எதையாச்சும் எழுதலாமென

எண்ணிக் கொள்ளும் போது

நகைச்சுவையும், நாடகமும்

எழுதிக்கொள்ள முடிகிறதே!

திரைக்கதை

எழுத நினைக்கையிலே

எனது எழுத்துகளுக்கு

நானே

திறனாய்வும் தாக்குரையும்

எழுத வேண்டியதாயிற்று!

எதை எதையோ

எழுத நினைக்கையிலே

எது எதுவோ எழுத வர

எழுதிக்கொள்கிறேன்

ஆனால்,

என் கிறுக்கல்களை

இலக்கியம் என்று சொல்ல

என் வாசகர்களே சான்று!

உறவுகளே!

என்னை விடச் சிறப்பாக எழுதுங்கள்…

எங்கள் எழுத்துக்களால்

உலகெங்கும் தமிழ் பரவட்டுமே!

Advertisements