எழுதுகோல் ஏந்தித் தமிழைப் பேணுவோம்.

மொழியை அழியாமல் பேண, அம்மொழியால் ஆன இலக்கியங்கள் பெரிதும் உதவும். எனவே, தமிழை அழியாமல் பேண தமிழ்ப் படைப்பாளிகளின் தரமான இலக்கிய ஆக்கங்கள் தேவைப்படுகின்றன.

ஆயினும், பொத்தக வாசிப்புச் சற்று இந்தக் காலத்தில் குறைவடைந்தே காணப்படுகிறது. அப்படியிருப்பினும் இணைய வழி வெளியீடுகளை வாசிப்பவர் அதிகம் தான். ஆகையால், எழுத விரும்பும் எந்தப் புதிய வழித் தோன்றல்களும் எழுத முன்வரலாம்.

உலகெங்கும் தூய தமிழ் பேண உதவும் வகையில் படைப்பாளிகளை ஆக்க உதவும் பதிவுகளை இத்தளத்தில் தர யாழ்பாவாணன் முயற்சி செய்கிறார். எழுதுகோல் ஏந்தினால் எழுத்தாளர் தான். படைப்புகளை ஆக்கினால் படைப்பாளி தான். ஆனால், அதற்குத் தேவை பிற படைப்பாளிகளின் நூல்களை வாசிக்கும் பழக்கம்.

உங்கள் எண்ணத்தில் எழும் எதையும் உங்கள் வண்ணத்தில் எழுதுங்கள். ஆனால், பிற மொழிச் சொல்களைக் கலவாது எழுத முன்வாருங்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் பிற மொழிச் சொல்கள் வரலாம். அவ்வேளை அவற்றை அடைப்புக்குள் எழுதி, அதற்கான தமிழ்ச் சொல்லைப் படைப்பில் சேர்க்கலாம். அதுவே நல்ல தமிழைப் பேண நீங்கள் செய்யும் பணியாகும்.

Advertisements