உலகெங்கும் தமிழர்

“பொய் அகல நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்

வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றி மூத்த குடி”

என்று (தமிழர் தொன்மையையும் தமிழர் வீரத்தையும்) புறப்பொருள் வெண்பா மாலையிலே ஐயனாரிதனார் என்கின்ற புலவர் எழுதியதைச் சுட்டிக்காட்டி தமிழ் இனத்தின் தொன்மை பற்றி விளக்கியிருந்ததை ஓர் இணையத்தளத்தில் படித்தேன்.

“உலகெங்கிலும் தமிழர் வாழ்ந்தார்களா?” என்ற கேள்வி மேற்காணும் பாடலைப் படித்ததும் எழும். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி எங்கள் தமிழ் குடி” என்று மேற்காணும் பாடலை வைத்துத்தான் சொன்னார்களோ தெரியவில்லை. அறிவியலில் மண் தோன்றுமுன் கல் தோன்றியதை ஒப்பிட்டு உலகிலேயே தொன்மை வாய்ந்த குடியினர் தமிழர் என்று விளக்கும் கருத்திது. இதன் அடிப்படையில் பார்த்தால் உலகெங்கிலும் தமிழர் வாழ்ந்திருக்கலாம் என்றே எண்ண முடிகிறது.

அறிஞர்களே! உங்கள் இணையப் பக்கங்களில் உலகெங்கிலும் தமிழர் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகளைப் பதிந்திருப்பின் அப்பக்கத்தின் இணைப்பைப் பின்னூட்டத்தில் பதிந்தால் பலருக்கு நன்மை தரும். நான் பல இணையத் தளங்களைத் துருவித் தேடிய வேளை 153 நாடுகளில் தமிழர் வாழ்கின்றமைக்கான/ வாழ்ந்தமைக்கான தகவலைப் பெற்றேன். அதனை உங்களுடன் கீழே பகிருகின்றேன்.

153 நாடுகளில் தமிழர் வாழ்கின்றனரா? நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கேள்வி இது. ஆயினும் சான்றுகள் உண்டு. இறுதியில் தரப்பட்டுள்ளது. உண்மையில் தமிழர் வாழும் நாடுகள் பற்றிப் பேசும் போது மலேசியா, கனடா, சிங்கப்பூர், பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, பிரித்தானியா (லண்டன்),  சுவிற்சர்லாந்து, நோர்வே, நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, பிஜி, மொரிசியஸ், சிசேல்ஸ், ரீயூனியன், கரிபியன் தீவுகள் (டிரினிடாட், ஜமைக்கா, சூரிநாம், கிரானடா, மார்டினிக்தீவு) , தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா எனப் பட்டியல் படுத்தப்படுகிறது.

சான்றும் விளக்கமும் அறியக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.

http://world4tamil.blogspot.com/

http://www.facebook.com/note.php?note_id=360555075693

http://www.facebook.com/note.php?note_id=10150279415679710

மேலும் மியன்மார்(பழைய பெயர் பர்மா)  நாட்டிலும் தமிழர் இருந்தனராம்.

சான்றும் விளக்கமும் அறியக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.

http://www.ikmahal.org/index.php?option=com_content&view=article&id=7758:2011-01-21-13-50-18&catid=251:2010-09-24-14-16-45&Itemid=363

என்றாலும் பெல்ஜியம், இத்தாலி, ஸ்கொட்லாந்து, சுவீடன், பின்லாந்து, அயர்லாந்து, சைப்பிரஸ், அரபு நாடுகள்(டோகா, கட்டார், குவைத்து, ஓமான், அபுதாபி, சவுதி அரேபியா, போன்ற), மாலைதீவு, அந்தமான் தீவு எனப் பல நாடுகளிலும் தமிழர் உள்ளனர்.  இவ்வாறு 150 நாடுகளிற்கு மேல் தமிழர் வாழலாம் எனக் கருத இடமுண்டு. ஆனால், என்னால் சான்றைத் தரமுடியவில்லை.

உலகில் தமிழ் தான் முதலில் தோன்றியிருந்தால், உலகெங்கும் தமிழர் பரந்து வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழர் எண்ணிக்கை குறைந்து வருவதனையும் தமிழ் மொழி கூட இன்னும் 30 ஆண்டுகளின் பின் புழக்கத்தில் இருந்து அகன்று விடும் என்ற கருத்து நிலவுவதையும் நாம் எல்லோரும் கருத்திற் கொள்ள வேண்டும். இதனடிப்படையிலேயே தூய தமிழ் பேணும் பணியை எல்லோரும் உணர்ந்து மேற்கொள்ளலாம் எனக் கருதியே இத்தளத்தை வடிவமைத்தேன்.

எப்படி இருப்பினும் தமிழ் இனி மெல்லச் சாகாது என்றும் தமிழை அழியாது பேணப் பல மூதறிஞர்களும் தமிழ் பற்றாளர் அமைப்புகளும் களத்தில் குதித்துள்ளனர். இதன் விளைவாக உலகெங்கும் தமிழர் தங்கள் தாய் மொழியைப் தங்கள் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டுமென்ற உணர்வை ஏற்படுத்தியமை இவர்களுக்குக் கிடைத்த முதற் படி வெற்றியாகும். இதனை மேலும் விரிவுபடுத்த இப்பதிவு உதவும் என நம்புகிறேன்.

அதாவது, முதலில்150 நாடுகளிலும் உள்ள தமிழருக்கிடையே ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர், அவர்கள் மத்தியில் தூய தமிழ் பேணும் பணியை விளக்க வேண்ணடும். அதன் பின் முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் நடைமுறைப்படுத்த இறங்கலாம். அதுவரை இவ்வாறான பதிவுகளுக்கூடாகத் தெளிவுபடுத்தலாம் என எண்ணுகிறேன். இந்த என் கருத்தைக் கணக்கிலெடுக்காமல், நீங்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு தூய தமிழ் பேணும் பணியைச் செய்ய இறங்குவீர்களென நான் நம்புகின்றேன்.

தூய தமிழ் பேணும் பணியைச் செய்ய உலகம் முழுக்க உள்ள தமிழர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? தமிழரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் அறிஞர்களில் ஒருவரான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் படைப்பிலிருந்து :

நாட்டின் பெயர் தமிழ் அகர வரிசையில் தமிழில், அங்கு வாழும் தமிழர் தொகை (2008ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மதிப்பீடு) பின்னர் ஆங்கிலத்தில், அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை (2008ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மதிப்பீடு), என்பன தந்துள்ளேன். – மறவன்புலவு சச்சிதானந்தம்

 முதலில் 149 நாடுகளைப் பார்ப்போம்.

எண் நாடு தமிழர் எண்ணிக்கை ஆங்கிலப் பெயர் மொத்த மக்கள் தொகை
1 அங்கோலா 10 Angola 18,498,000
2 அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் 200,000 United States of America 314,659,000
3 அயர்லாந்து 2,000 Ireland 4,515,000
4 அர்ஜென்ரினா 100 Argentina 40,276,000
5 அல்ஜீரியா 100 Algeria 34,895,000
6 அன்ரிகுவா – பார்புடா 1,000 Antigua and Barbuda 88,000
7 ஆப்கானிஸ்தான் 100 Afganistan 28,150,000
8 ஆர்மினியா 300 Armenia 3,083,000
9 ஆஸ்திரியா 1,500 Austria 8,364,000
10 ஆஸ்திரேலியா 100,000 Australia 21,293,000
11 இத்தாலி 5,000 Italy 59,870,000
12 இந்தியா 81,000,000 India 1,198,003,000
13 இந்தோனீசியா 300,000 Indonesia 229,965,000
14 இலங்கை 6,000,000 Sri Lanka 20,238,000
15 இஸ்ரேல் 100 Israel 7,170,000
16 ஈராக் 1,000 Iraq 30,747,000
17 ஈரான் 500 Iran 74,196,000
18 உகண்டா 100 Uganda 32,710,000
19 உக்ரெயின் 500 Ukraine 45,708,000
20 உஸ்பெகிஸ்தான் 300 Uzbekistan 27,488,000
21 எகிப்து 1,000 Egypt 82,999,000
22 எதியோப்பியா 100 Ethiopia 82,825,000
23 எமிரேட்ஸ், ஐக்கிய அரபு 200,000 United Arab Emirates 4,595,000
24 எரித்திரியா 100 Eritrea 5,073,000
25 எல்சால்வடோர் 100 El Salvador 6,163,000
26 எஸ்ரோனியா 500 Estonia 1,340,000
27 ஐஸ்லாந்து 25 Iceland 323,010
28 ஓமான் 50,000 Oman 2,845,000
29 கம்பூசியா 1,000 Cambodia 14,805,000
30 கயானா 10,000 Guyana 762,000
31 கனடா 300,000 Canada 33,573,000
32 கஸாக்ஸ்தான் 100 Kazakhstan 15,637,000
33 காட்டார் 10,000 Qatar 1,409,000
34 கானா 500 Ghana 23,837,000
35 கியூபா 100 Cuba 11,204,000
36 கிர்கிஸ்தான் 100 Kyrgyzstan 5,482,000
37 கிரிபாத்தி 25 Kiribati 98,000
38 கிரேக்கம் 10,000 Greece 11,161,000
39 கினீயா 1,000 Guinea 10,069,000
40 கினீயா பிஸ்ஸாவ் 100 Guinea-Bissau 1,611,000
41 குரோசியா 100 Croatia 4,416,000
42 குவாதமாலா 100 Guatemala 14,027,000
43 குவைத் 10,000 Kuwait 2,985,000
44 கென்யா 300 Kenya 39,802,000
45 கொங்கோ சயர் 25 Congo – Zaire 66,020,000
46 கொமொறொஸ் 100 Comoros 676,000
47 கொரியா, வட 100 North Korea 23,906,000
48 கொரியா,தென் 500 South Korea 48,333,000
49 கொலம்பியா 500 Colombia 45,660,000
50 சமோவா 100 Samoa 179,000
51 சவூதி அரேபியா 50,000 Saudi Arabia 25,721,000
52 சாம்பியா 2,500 Zambia 12,935,000
53 சான் மறினோ 25 San Marino 31,000
54 சிங்கப்பூர் 300,000 Singapore 4,737,000
55 சிம்பாப்வே 250 Zimbabwe 12,523,000
56 சியாரா லியோன் 1,000 Sierra Leone 5,696,000
57 சிரியா 500 Syria 21,906,000
58 சிலி 100 Chile 16,970,000
59 சீசெல்சு 9,000 Seychelles 84,000
60 சீனா 5,000 China 1,353,311,000
61 சுரினாம் 130,000 Suriname 520,000
62 சுலோவாக்கியா 100 Slovakia 5,406,000
63 சுலோவேனியா 100 Slovenia 2,020,000
64 சுவாசிலாந்து 5,000 Swaziland 1,185,000
65 சுவிற்சர்லாந்து 60,000 Switzerland 7,568,000
66 சுவீடன் 12,000 Sweden 9,249,000
67 சூடான் 100 Sudan 42,272,000
68 செக் 100 Czech 10,369,000
69 செர்பியா 200 Serbia 9,850,000
70 செனகல் 25 Senagal 12,534,000
71 சைப்ரஸ் 500 Cyprus 871,000
72 சோமாலியா 25 Somalia 9,133,000
73 டென்மார்க் 15,000 Denmark 5,470,000
74 தஜிக்கிஸ்தான் 100 Tajikistan 6,952,000
75 தாய்லாந்து 10,000 Thailand 67,764,000
76 தான்சானியா 250 Tanazania 43,739,000
77 துர்க்மெனிஸ்தான் 50 Turkmenistan 5,110,000
78 துருக்கி 500 Turkey 74,816,000
79 துனீசியா 100 Tunisia 10,272,000
80 தென் ஆபிரிக்கா 750,000 South Africa 50,110,000
81 தைவான் 100 Taiwan 25,300,000
82 நமீபியா 25 Namibia 2,171,000
83 நவுறு 100 Nauru 10,000
84 நியுசிலாந்து 30,000 New Zealand 4,266,000
85 நெதர்லாந்து 12,000 Netherlands 16,592,000
86 நேபாளம் 500 Nepal 29,331,000
87 நைஜர் 25 Niger 15,290,000
88 நைஜீரியா 2,500 Nigeria 154,729,000
89 நோர்வே 15,000 Norway 4,812,000
90 பராகுவே 25 Paraguay 6,349,000
91 பல்கேரியா 200 Bulgaria 7,545,000
92 பனாமா 500 Panama 3,454,000
93 பஹ்ரெயின் 7,000 Bahrain 791,000
94 பஹாமாஸ் 200 Bahamas 342,000
95 பாகிஸ்தான் 1,000 Pakistan 180,808,000
96 பாபுவா-நியுகினீயா 500 Papua-New Guinea 6,732,000
97 பார்படாஸ் 1,000 Barbados 256,000
98 பாலஸ்தீனம் 200 Palestine 3,336,000
99 பிரான்ஸ் 50,000 France 62,343,000
100 பிரிட்டன் 300,000 United Kingdom 61,565,000
101 பிரெஞ்சு கயானா பிரா. 1,000 French Guyana 170,000
102 பிரேசில் 100 Brazil 193,734,000
103 பிலிப்பைன்ஸ் 200 Philippines 91,983,000
104 பின்லாந்து 3,000 Finland 5,326,000
105 பிஜி 125,000 Fiji 849,000
106 புர்கினோ பாசோ 100 Burkina Faso 15,757,000
107 புறுணை 1,500 Brunei 400,000
108 பூடான் 100 Bhutan 697,000
109 பெர்முடா பிரி. 100 Bermuda 63,000
110 பெரு 100 Peru 29,165,000
111 பெல்ஜியம் 12,000 Belgium 10,647,000
112 பொலிவியா 1,000 Bolivia 9,863,000
113 பொற்சுவானா 1,000 Botswana 1,950,000
114 போர்த்துக்கல் 500 Portugal 10,707,000
115 போலாந்து 500 Poland 38,074,000
116 மசிடோனியா 100 Macedonia 2,042,000
117 மலாவி 500 Malawi 15,263,000
118 மலேசியா 2,250,000 Malaysia 27,468,000
119 மால்ரா 100 Malta 409,000
120 மாலி 250 Mali 13,010,000
121 மாலை தீவு 2,000 Maldives 309,000
122 மியான்மா 600,000 Myanmar 50,020,000
123 மெக்சிகோ 3,000 Mexico 109,610,000
124 மொல்டோவியா 25 Moldovia 3,604,000
125 மொறிசியசு 126,000 Mauritius 1,288,000
126 மொறித்தானியா 100 Mauritania 3,291,000
127 மொறொக்கோ 100 Morocco 31,993,000
128 மொனாகோ 50 Monaco 33,000
129 யப்பான் 200 Japan 127,156,000
130 யேமன் 500 Yemen 23,580,000
131 ரஷ்யா 5,000 Russia 140,874,000
132 ரினிடாட் – ரொபாகோ 100,000 Trinidad and Tobago 1,339,000
133 லக்செம்போர்க் 1,000 Luxembourg 486,000
134 லற்வியா 500 Latvia 2,249,000
135 லாவோஸ் 1,000 Lao 6,320,000
136 லிதுவானியா 100 Lithuania 3,287,000
137 லிபியா 500 Libya 6,420,000
138 லெசொத்தோ 500 Lesotho 2,067,000
139 லெபனன் 5,000 Lebanon 4,224,000
140 லைபீரியா 500 Liberia 3,955,000
141 வங்காள தேசம் 1,000 Bangladesh 162,221,000
142 வத்திக்கான் நகர் 20 Vatican City 1,000
143 வியற்னாம் 3,000 Viet Nam 88,069,000
144 ஜமைக்கா 30,000 Jamaica 2,719,000
145 ஜிபுற்றி 1,000 Djibouti 864,000
146 ஜெர்மனி 40,000 Germany 82,167,000
147 ஜோர்டான் 4,000 Jordan 6,316,000
148 ஜோர்ஜியா 25 Georgia 4,260,000
149 ஸ்பெயின் 500 Spain 44,940,000

விடுதலை பெறா ஆட்சிப் புலங்கள் நான்கைப் பார்ப்போம்.

எண் நாடு தமிழர் எண்ணிக்கை ஆங்கிலப் பெயர் மொத்த மக்கள் தொகை
1 சானல் தீவுகள் பிரி. 25 Channel Islands 145,000
2 நியு கலிடோனியா பிரா. 500 New Caledonia 250,000
3 றியுனியன் பிரா. 500,000 Reunion 782,000
4 ஜிப்றால்ரர் பிரி. 25 Gibraltor 27,000

தமிழர் தொகை பற்றிய இந்தக் கணிப்பு மேலும் திருத்தம் பெற நீங்கள் உதவலாம். உங்களுக்குத் தெரிந்தவருக்கு இந்த விவரம் தெரியலாம். விசாரித்துஉதவுக. நீங்கள் வாழும் நாடு மட்டுமல்ல, பிற நாடுகளின் விவரங்களையும் திரட்டலாம்.

தகவல்: பால்பழனி ; ஆதாரம்: சென்னை ஆன்லைன்.

இவ்வாறு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் ‘என்வழி’ தளத்திலிருப்பதை அப்படியே பொறுக்கித் தந்துள்ளேன்.

சான்றும் விளக்கமும் அறியக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.

http://www.envazhi.com/?p=9360

இவ்வளவு இலட்சம் மக்கள் இத்தனை நாடுகளில் இருந்தும் 30 ஆண்டுகளின் பின் தமிழ் அழியுமா? ‘இல்லை’ என்று சொல்ல முடியாதுள்ளது. இத்தனை ஆட்களில் எத்தனை ஆட்கள் ‘தமிழ் எழுதப் பேசத் தெரிந்தவர்களாக உள்ளனர்’ என்பதை வைத்தே பதில் கூறமுடியும். எப்படியாயினும் தமிழ் தெரியாத தமிழர்களைத் தேடிப் பிடித்துத் தமிழ் கற்பித்தே ஆகவேண்டும். இல்லையேல் ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்பதில் ஐயம் உண்டு. உலகம் எங்கும் தூய தமிழ் பரப்பிப் பேண நாம் எல்லோரும் ஒன்றுபடுவதன் மூலமே தமிழைச் சாகாமல் வாழ வைக்க முடியும்.

நானோ அறிவிற் சிறியன். எனது தூய தமிழ் பேணும் பணியை வெளிப்படுத்தப் பல நூல்களையோ பல இணையப் பக்கங்களையோ பார்வையிட்டுப் பொறுக்கித் தொகுத்த விரிப்புகளையே என்னால் தர முடிகிறது. இதனால் என் மீது சீறிப் பாய வேண்டாம். ‘யார் குற்றினாலும் அரிசி ஆகட்டும்’ என்பதற்கிணங்க எவரது பதிவைப் படித்தேனும் உலகெங்கும் வாழும் மக்கள் தூய தமிழைப் பேணினால் சரி. அதுவே இன்றைய தேவை.

2 thoughts on “உலகெங்கும் தமிழர்

  1. அன்பு ஐயா,
    எங்கள் மியன்மா நாட்டுத் தமிழர்களை தமிழுலகம் மறந்து புறக்கணித்து விட வேண்டாம் என்பதே அன்பு வேண்டுகோள். வளர்க நம் நட்பும்.
    என்றும் தமிழன்புடன்,
    சோலை.தியாகராசன்.
    Yangon,Myanmar.
    +95 943042105
    email: solai.thiyagarajan@gmail.com

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன்.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s